Monday, January 14, 2013

Arika Iyarpiyal


 அறிக இயற்பியல்

ஓர் அமைப்பில் வெறும் ஒரு வகை மின்னூட்டத் துகள்களை மட்டும் கொண்டு நிலைப்புத் தன்மையைப் பெறமுடியாது ஒவ்வொரு துகள் மீதும் செயல்படும் விலகு விசையைச்சமன் செய்ய கவர்ச்சி விசையை விளைவிக்க ஒரு எதிர் வகை மின்னூட்டத் துகள் இருக்கவேண்டும் .அமைப்பில் ஒரு சீர்மை இருக்கும் போது இது இயலுவதாகின்றது .உயர் வெப்ப நிலையில் பொருள் பிளாஸ்மா என்ற நான்காவது நிலையில் இருக்கும். அதில் சம அளவு எதிர் மின்னூட்ட ம் கொண்ட எலெக்ட்ரா ன்களும் ,நேர் மின்னூட்ட ம் கொண்ட அயனிகளும் இருந்தாலும் சீர்மையின்மையால் பெரும்பான்மை விலகிச் செல்கின்றன . அதனால் பிளாஸ்மா எப்போது ஒரு நிலையற்ற நிலையிலேயே இருக்கின்றது .

r என்றபக்க நீளமுள்ள ஒரு சதுரத்தின் ஒவ்வொரு மூலையிலும் q என்ற எதிர் மின்னூட்டத் துகள் உள்ளது. இவை அவ்வமைப்போடு நிலையாக இருக்க அமைப்பின் பொது மையத்தில் Q என்ற நேர் மின்னூட்டத் துகளொன்று வைக்கப் படுகிறது. Q ன் எல்லா மதிப்பிற்கும் இது சரியாக இருப்பதில்லை .அப்படியென்றால் q வைப் பொறுத்த Q ன் மதிப்பு என்ன ?  

ஒரு மூலையிலுள்ள எதிர் மின் துகள் மீது பிற மூன்று எதிர் மின் துகள்களால் விலகு விசைக்கு உட்படும் .இவற்றுள் இரண்டு r தொலைவிலும் மற்றொன்று மூலைவிட்டத்தில் 21/2 r தொலைவிலும் இருப்பதால் விலகு விசை முறையே q 2/k r 2, q 2/2k r 2 ஆகும் .இம் மூன்று நேர் கோட்டு விசைககளின் கூடுதல் q 2/k r 2[(2x21/2 +1)/2]. பொது மையத்திலுள்ள நேர்மின் துகள் எதிர்மின் துகளிலிருந்து r /21/2 என்ற தொலைவிலிருப்பதால் கவர்ச்சி விசை 2q Q /k r 2 .இவ்விரு விசைகளும் சமமாக இருக்க Q = q [(2x21/2 +1)/4] என்ற நிபந்தனையைத் தருகிறது .

 

No comments:

Post a Comment