மனம்
மனதை சலனப் படுத்தாதே.யாரும் சலனப்படுத்த அனுமதிக்காதே .ஏனெனில் மனம் எப்போதும் ஓர் உறுதியில்லாச் சமநிலையில் இருக்கிறது.சட்டெனெ உள்ளெதிரியாக மாறிவிடக் கூடும்.
எதிரியென்று உண்மையிலேயே யாரேனும் இருப்பதாக நீ நினைத்தால் அது உன் மனமாகத்தான் இருக்க முடியும்
எதை மறக்க வேண்டும் என்று சொல்கின்றோமோ அதை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து விடுகின்றோம். பிறர் சொல்வதில் நம்பிக்கையின்மை, எதையும் எதிர்க்க வேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வு, அதையும் பார்த்து விடுவோமே என்ற ஆவல், இப்படி அதற்குப் பல காரணங்களைக் கூறலாம்.
மனம் இயல்பாக மகிழ்ச்சியாக இருந்தால் அதன் சிந்திக்கும் திறன், செயல் திறன் அதிகமாக இருக்கும். மனம் சோர்ந்து இருந்தால் அதன் பயனுறு திறன் குறைவாகவே இருக்கும் .எனவே வாழ்க்கை பயனுறுதிறன் மிக்கதாக இருக்க வேண்டுமெனில் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் .
நாம் மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் இருக்கும் போது துன்பப்படுபவனைப் பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக் கொள்கின்றோம். துன்பப்படும்போது உலகமே தன்னை வந்து பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் .
தொடர்ந்து மனதைத் தொடவில்லை என்றால் மனதை வேறெங்கோ பறி கொடுத்துவிட்டாய் என்று அர்த்தம்
ஒரு சிலரோடு ஒத்துப்போக முடியாதவன் சமுதாயத்தோடு ஒத்துப் போகமாட்டான் .
மனம் அறிந்ததை ,கேள்விப் பட்டதை விரும்பும் .அறியாதனவற்றைப் பற்றி சிந்திக்காது .தெரியாததை நினைத்து ஏங்காது .அதனால்த்தான் சான்றோர்கள் "தீயதை மனதிற்கு ஒருபோதும் அறிமுகப்படுத்தி விடாதீர்கள் " என்று அறிவுரை கூறுகின்றார்கள் .ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் தனக்கு அறிமுகமான தீயதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கும்.அது தொடர்பான எண்ணங்களை அசைபோடும் .பின்னர் பின்பற்றி ஒழுகவும் துணிவு கொள்ளும் .
ஒரு மனிதனுக்கு இரண்டு மனநிலைகள் அவனுக்காக ஒன்று .அது அவன் மட்டுமே தனித்திருக்கும்போது அதிகம் வெளிப்பட்டுத் தோன்றும்.மற்றவர்களுக்காக ஒன்று. சமுதாயத்தில் கூடியிருக்கும் போது காட்டிக் கொள்ளும் .
No comments:
Post a Comment