Micro aspects of developing inherent potentials
மூளை செய்திகளின் ஒரு சேமிப்புக் கிடங்கு அதில் தேவையான எல்லா விஷயங்களையும் பதிவு செய்து வைத்துக் கொள்ள வழி இருக்கிறது அதில் பதிவு செய்யப்பட்ட விஷயங்களை மட்டுமே ஒருவர் தேவையானபோது மீட்டுப்பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் அதிகமான சேமிப்பும் அதிகமான நினைவாற்றலும் அவரின் திறமையை மேம்படுத்துகின்றது .மூளையின் செயலாக்கத் திறமையைப் பொறுத்தே ஒருவரின் சிறப்பும் அமைகிறது.மூளைக்குச் செய்திகளைத் தருவது ஐம்பொறிகளே .எல்லோரும் மூளையும் ஐம்பொறிகளையும் பெற்றிருந்தாலும் ,அவர்களுடைய செயலாக்கத் திறமை ஒருவர்க்கொருவர் வேறுபடுகின்றது .இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தங்களது ஐம்பொறிகளில் ஒரு சிலவற்றை அதிகமாகவும்,சிறப்பாகவும் பயன்படுத்திக் கொள்வதுதான் .ஒரு பொறியை அதிகம் பயன்படுத்துவது தவறில்லை ஆனால் ஒரு பொறியைப் பயன்படுத்தாமலேயே விட்டுவிடுவதுதான் தவறு.அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொறியால் ஏற்படும் வளர்ச்சி, அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு பொறியால் ஏற்படும் வளர்ச்சிக் குறைவால் மட்டுப்படுத்தப்படுவதுமுண்டு. ஒருவர் பல திறமை களை ப் பெறமுடியும் என்றாலும் ஒரே சமயத்தில் அவற்றை முழுமையாகப் பெறமுடியாது.முதலில் ஒரு குறிப்பிட்ட திறமையில் வளர்ச்சி பெற்று பின்னர் அடுத்த திறமையில் கவனம் செலுத்துவது பயன்தரும்.ஆனால் ஒருவரே பலதரப்பட்ட திறமைகளில் மேலோங்கி விளங்க முடியாது.மேலும் இந்தத் திறமைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்தால் வளர்ச்சிப் படிகளை மிக எளிதாகவும் இயல்பாகவும் கடக்கமுடியும்
No comments:
Post a Comment