விண்வெளியில் உலா-கன்னி ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்
பூட்டெஸ் (Bootes)
ராசி மண்டல விண்மீன் கூட்டங்களுள் இரண்டாவது பெரிய வட்டாரம் விர்கோவாகும் .இவ் வட்டார விண்மீன் கூட்டம் பேரண்டத்தின் நடுவரைக் கோட்டுப் பகுதியில் லியோவிற்கும் லிப்ராவிற்கும் இடையில் அமைந்துள்ளது .சூரியன் கதிர்வீதியில் நகர்ந்து செல்லும் போது இவ் வட்டாரத்தில் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 31 வரையிலான காலத்தைக் கழிக்கின்றது .இது கன்னி ராசிக்குரிய நட்சத்திரக் கூட்டமாகும் .
இந்த வட்டார விண்மீன் கூட்டம் நீதிக்குரிய பெண் கடவுளான டிக்கியை (Dike) பெருமைப்படுத்துவதற்காக என்று சிலரும், தானியங்களுக்கான பெண் கடவுளான டிமெட்டரை (Demeter) நினைவூட்டுவதற்காக என்று வேறு சிலரும் கூறுவார்கள் .இதில் 95 விண்மீன்களை வானவியலார் இனமறிந்துள்ளனர்.இதிலுள்ள முக்கியமான விண்மீன் ஸ்பைகா என அழைக்கப்படும் ஆல்பா வெர்சினிஸ் ஆகும் .இது லியோ வட்டாரத்திலுள்ள ரெகுலஸ் என்ற விண்மீனை விட பிரகாசமிக்கதும், வெப்பமிக்கதும்,பலமடங்கு பெரியதுமாக உள்ளது .இதனுள் 600 சூரியன்களை உள்ளடக்கிவிடலாம் .இதன் முன்னே நமது சூரியன் யானையின் முன்னே பூனை போன்றது .262 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்பைகா விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன்களின் வரிசையில் 15 வதாக உள்ளது .
ஸ்பைகா,ரெகுலஸை விடக் கூடுதலான தொலைவில்,அதாவது 185 ஒளி ஆண்டுகள் தள்ளி இருந்தாலும் ஸ்பைகா ஓரளவு பிரகாசமாக ,தோற்ற ஒளிப்பொலிவெண் 0.98 உடன் காணப்படுகின்றது .ஸ்பைகா வெண் நீல நிறத்துடன் ஒளிர்கின்றது .இதை நம்மவர்கள் சித்திரை என அழைப்பார்கள் .தொலை நோக்கி இதற்கு ஒரு துணை விண்மீன் இருப்பதாகப் புலப்படுத்தவில்லை .ஆனால் ஒளி -மின் அளவீட்டு முறைகள் அதன் ஒளிச்செறிவில் நுண்ணிய அளவு ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டின .அப்போது அதன் ஒளிப்பொலிவெண் 0.1 மாற்றத்திற்கு உட்பட்டிருந்தது.இது அலைவுகால முறைப்படி நிகழ்ந்ததால் ஸ்பைகா ஒரு மறைப்பு வகை இரட்டை விண்மீனாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆராய்ச்சி முடிவுகள் மிகமிக அருகாமையில் ஒரு துணை விண்மீன் 4 நாட்களுக்கு ஒருமுறை ஸ்பைகாவைச் சுற்றி வருவதைத் தெரிவித்தன .
ஸ்பைகா என்றால் லத்தீன் மொழியில் கோதுமையின் கதிர் எனப் பொருள்படும் .இதைக் கன்னிப் பெண்ணொருத்தி இடது கையில் பிடித்திருப்பது போல விர்கோ நட்சத்திரக் கூட்டம் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ் வட்டாரத்தில் வானவியலாரின் கவனத்தைக் கவர்ந்த மற்றொரு விண்மீன் பொரிமா (Porrima) என்ற காமா வெர்ஜினிஸ் ஆகும்.வெறும் கண்களுக்கு 2.7 என்ற ஒளிப்பொலிவெண் கொண்ட இது ஒரு தனி விண்மீன் போலத் தோன்றினாலும் உண்மையில் இதில் வெளிறிய மஞ்சள் நிறமும்,ஏறக்குறைய சமமாக தோற்ற ஒளிப்பொலிவெண் 3.5 ம் கொண்ட இரு விண்மீன்கள் பொது மையத்தை 169 ஆண்டுகளுக்கொருமுறை சுற்றி வருகின்றன என்று 1718 ல் பிராட்லி என்ற வானவியலார் கண்டறிந்தார். இவற்றின் கோண விலக்கம் சுமார் 5 வினாடிகள் .39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த இரட்டை விண்மீன்களுக்கு இடைப்பட்ட தொலைவு 44 வானியல் தொலைவாகும் .1836 லும் 2005 லும் இந்த விண்மீன்கள் விண்மீன் கள் நெருக்கமாக இருந்தன 1920 லும் 2089 லும் அதிகமாக விலகி இருக்கும்

No comments:
Post a Comment