Wednesday, April 3, 2013

Creative Thoughts


பொருளின் அருமை அது தானாகக் கிடைக்கும் போது தெரிவதை விட ,முனைந்து பெறப்படும் போதுதான் முழுமையாக உணரப்படுகின்றது .இது கல்விக்கும் கூடப் பொருந்தும் .குறிக்கோளும்,தேடுதலும் இன்றிப் பெற்ற கல்வி அதன் தேவை உணரப்படாததால் ,அவசியமற்றது என்ற உணர்வை மேலோங்கச் செய்து , கற்ற கல்வியை மறக்கச் செய்து விடுகின்றது .கல்வியின் பயனுறு திறன் பெரும்பாலான மாணவர்களிடம் நம்பமுடியாத அளவிற்குக் குறைவாகக் காணப்படுவதற்கு இது காரணமாகி விடுகின்றது.

சுய ஆர்வம் ஏற்பட்டு விட்டால் பிறவற்றில் ஏற்படுகின்ற ஆர்வங்களைப் பெருமளவு இயல்பாகவே தடுத்து விட முடியும் .கட்டாயப் படுத்துவதை விட சுய ஆர்வம் ஏற்படுமாறு செய்வது குழந்தை வளர்ப்பில் பயன்தரக் கூடியது. இதை நாம் செய்யத் தவறுவதால் குழந்தைகள் கல்வியை ஒரு கட்டாயத்திற்காகவே கற்கும் நிலை ஏற்படுகின்றது

குறிக்கோள் இல்லாமல் பெற்ற கல்வி மனதில் நிலைத்து நிற்பதில்லை. எளிதாக வரபெற்று எப்படி வந்ததோ அப்படியே வெளியேறி விடுகின்றது .

அறிவு என்பது மிகப் பொதுவானது .நுண்ணறிவு என்பது ஒருவர் தனக்குள்ளே பெருக்கிக் கொள்வது .

அதிர்வுகள் எப்போதும் அதன் சமநிலையை மையங் கொண்டே அதிர்வுறும் . அதுபோல நம்முடைய எண்ணங்களும் சமுதாய நலத்தை மையங் கொண்டே அமையவேண்டும் .அதிர்வு பலமானால் கட்டறுந்து விலகி ஓடுவது போல .எண்ணம் தீயதானால் சமுதாயம் சீரழியும் .

கல்வி தனி மனிதனுக்கு நன்னடத்தையைக் .கற்பிக்கின்றது .சமுதாயத்தின் வறுமையைப் போக்குகின்றது .

1 comment:

  1. Sir, this post sounds so good! Very insightful! I completely agree with your idea!

    ReplyDelete