Saturday, April 27, 2013

Short story


சிறு கதை

ஓர் ஊரில் ஓர் இரட்டையர் இருந்தனர்.இருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமிருந்தது .விளையாட்டில் எப்போதும் இளையவனே ஜெயிப்பான். ஒவ்வொரு முறையும் இளையவனுக்காக விட்டுக் கொடுத்ததாக மூத்தவன் கூறுவான் .இளையவன் ஒருபோதும் அதை ஒப்புக்கொள்ளமாட்டான்.விளையாட்டில் கொண்டுள்ள ஆர்வமும் வெற்றி மீதுள்ள நம்பிக்கையும் தன் வெற்றிக்குக் காரணமென இளையவன் மறுத்துக் கூறுவான்.

ஒரு சமயம் ஒரு விதமான பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவியது .இரட்டையர்களில் இளையவனுக்கு மட்டும் அந்தக் காய்ச்சல் வர மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப் பட்டான்.சில நாட்களில் இளையவன் முழுதும் குணமாகி வீடு திரும்பினான். ஆனால் வீட்டில் இருந்த மூத்தவன் திடீரென இறந்து போனான் .

இளையவனின் நலனுக்காக மூத்தவன் உயிர் விட்டான் என்று எல்லோரும் போல இளையவனும் நினைத்தான்.ஆனால் உண்மையை இறைவனைத்தவிர யாரறிவார். இரட்டையராய்ப் பிறந்தவர்கள் இரட்டையராய் இறப்பார்கள் என்று யாரோ சொன்னதை நம்பி பயத்தினால் நம்பிக்கை இழந்த மூத்தவன் வாழ்கையை இழந்தான். தான் எப்படியும் உயிர் பிழைத்து மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போகின்றோம் என்று நம்பிய இளையவன் வாழ்கையை மீட்டுப் பெற்றான். மெய்யான நம்பிக்கையே வாழ்க்கை . ஆழமான மனநம்பிக்கை உடலுக்குள் சில அழுத்தமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

No comments:

Post a Comment