Saturday, April 20, 2013

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -ஸ்ரான்டியம் (Stradium) கண்டுபிடிப்பு

1787 ல் ஸ்காட்லாந்தில் ஒரு ஈயச் சுரங்கத்தில் ஒரு புதிய வகைக் கனிமம் (ஸ்ட்ரான்டியனைட்) கிடைத்தது அதைக் கால்சியம் புளூரைடு என்றும் வேறு சிலர் அது விதரைட் (witharite) என்ற பேரியக் கனிமம் என்றும் கூறினர் .1790 ல் ஸ்காட்லாந்து விஞ்ஞானியான கிராபோர்டு (A.Crawford) ஸ்ட்ரான்டியனைட்டும் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து விளைவித்த உப்பு என்றும் பேரியம் குளோரைடிலிருந்து வேறுபட்டிருக்கின்றது என்றும்,அது நீரில்விரைவாகக் கரைந்தவுடன் அதன் படிக்கக்கட்டமைப்பும் மாறுபடுபடுகின்றது என்றும் அதனால் அக்கனிமத்திலொரு புதியதனிமம் இருக்கவேண்டும் என முடிவு செய்தார் .பின்னர் வந்த ஹோப் மற்றும் லவாய்சியர் இதேகருத்தை வெளியிட்டனர் .எனினும் 1808 ல் டேவி இதில் வெற்றி கண்டார் .மின்னாற்பகுப்பு(Electorolysis) வழிமுறை அவருக்குக் கை கொடுத்தது .ஸ்ட்ரான்டியம் குளோரைடை, பொட்டசியம் குளோரைடுடன் கலந்து உருக்கி மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி இவ்வுலோகத்தைப் பெறலாம் .வெற்றிட வெளியில் உயர் வெப்ப நிலையில் அலுமினியத்தால் ஸ்ட்ரான்டியம் ஆக்சைடை ஆக்சிஜநீக்க வினைக்கு உள்ளாகியும் இதைப் பெறலாம் .ஸ்காட்லாந்தின் ஒரு முக்கிய நகரம் ஸ்ட்ரான்டியன் .இதுவே இத் தனிமத்திற்கு பெயர் தரக் காரணமாயிற்று .

பண்புகள்

Sr என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஸ்ட்ரான்டியத்தின் அணுவெண் 38,அணு நிறை 87.62 ,இதன் அடர்த்தி 2600 கிகி/கமீ ,இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 350.2 K ,1723 K ஆகும் .இது மூன்று வேற்றுருக்களையும் 235 டிகிரி செல்சியஸ் மற்றும் 540 டிகிரி செல்சியஸ் நிலைமாற்ற வெப்ப நிலைகளையும் கொண்டுள்ளது .

ஸ்ட்ரான்டியம் கால்சியத்தை விட மென்மையானது. நீரைத் தீவிரமாகப் பகுக்கின்றது.380 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழ் நைட்ரஜனை உட்கவர்வதில்லை.காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் இதைப் பாதுகாப்பாக மண்ணெண்ணைக்குள் போட்டு வைத்திருப்பார்கள். புதிதாக வெட்டப்பட்ட பரப்பு வெள்ளி போன்ற பளபளப்பைப் பெற்றிருக்கின்றது .காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்ற பின் அதன் நிறம் மஞ்சளாக மாறுகின்றது .நேர்த்தியாகப் பொடியாக்கப்பட்ட              ஸ்ட்ரான்டியம் காற்றில் தானாக எரிகின்றது  

இயற்கையில் கிடைக்கும் ஸ்ட்ரான்டியத்தில் நான்கு நிலையான அணு எண்மங்கள் (isiotopes) உள்ளன .12 நிலையற்ற அணு எண்மங்களை இனமறி ந்துள்ளனர்.

பயன்கள்

நிலையற்ற, கதிரியக்கம் கொண்ட ஸ்ட் ரான்டியம் -90 ன் அரை வாழ்வு 28 ஆண்டுகள் .இதன் பீட்டாக் கதிர் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியது .நீண்ட கால அரை வாழ்வும் ,ஆற்றல் மிக்க பீட்டாக் கதிரையும் கொண்ட இந்த கதிரியக்கத் தனிமம் அணு ஆற்றல் மூலமாகக் கொள்ளப்பட்டு ,விண்கலம் ,விண்வெளி ஆய்வகம் ,விண்வெளி ஓடம் போன்றவறில் உள்ள சாதனங்களை இயக்கப் பயன்படுத்துகின்றார்கள் தொலை தூர வானிலை ஆய்வு மையங்களிலும்,கப்பல்களிலும் பயன்தருகின்றது

ஸ்ட்ரான்டியம் ஹைட்ராக்சைடு சக்கரை ஆலைகளில் பயன்படுகின்றது எனினும் இதைவிடச் சுண்ணாம்பு அனுகூலமிக்கதாக இருக்கின்றது. ஸ்ட்ரான்டியம் டைடானேட் மிக அதிகமான ஒளிவிலகல் எண்ணையும் (Refractive index ) ,வைரத்தை விடக் கூடுதலாக நிறப்பிரிகை செய்யும் தன்மையையும் கொண்டுள்ளது .அதனால் இதை இரத்தினக் கல்லாகப் பயன்படுத்துகின்றார்கள் .ஆனால் இது மிகவும் மென்மையானது .வைரம் போலக் கடினத்தன்மை மிக்கதில்லை ,

ஸ்ட்ரான்டியத்தின் பயன்பாடு ஏறக்குறைய பேரியம் ,கால்சியத்தை ஒத்தது எனினும் அவற்றை விட விலைமதிப்பு மிக்கது .

No comments:

Post a Comment