எழுதாத கடிதம்
நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படிப் பயனுள்ளவாறு வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் .யாருக்கும் யாதொரு பயனுமின்றி 100 ஆண்டுகள் வாழ்வதை விட பயனுள்ளவாறு கொஞ்ச காலம் வாழ்ந்தால் அதுவே மேலானது .வாழ்க்கை மட்டுமில்லை நம்முடைய பதவிக்காலமும் அப்படித்தான் .எவ்வளவு நாள் பதவியில் இருந்தோம் என்பதில் ஒரு சிறப்புமில்லை,கிடைத்த பதவியால் என்ன செய்தோம் என்பதில் தான் பெருமையே.
கூட்டணியிலிருந்து யார் விலகிச் சென்றாலும் எங்களுக்குக் கவலையில்லை .ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்வோம் என்று நீங்கள் சொல்வது பெருமைக்குரிய சாதனையாக எனக்குத் தோன்றவில்லை.ஐந்தாண்டு காலம் ஆட்சி புரிவதற்காகவா ஆட்சிக்கு வந்தோம் ?
உங்களுக்கு அளித்த வாய்ப்பை மக்களின் நலனுக்காக எப்படிப் பயன்படுத்துகின்றீர்கள் என்பதே மக்கள் ஆட்சியில் முக்கியம். சில நாட்களே ஆட்சி செய்தாலும் அதைச் செம்மையாகச் செய்பவனே நல்ல ஆட்சியாளன் .அவனைப் பற்றி சரித்திரம் எப்போதும் பெருமையாகப் பேசும்.
நீங்க இன்னும் எங்க சங்கர் இயக்கிய முதல்வன் படத்தை முழுமையாகப் பார்க்கவில்லை போலும். .ஒரு நாள் முதல்வர் என்றாலும் எப்படி ? அப்படி.
Great one, Sir!
ReplyDelete