எழுதாத கடிதம்
ஒரு மாநிலத்தின் முதல்வரை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கிவிட்டனர் .வெறும் கருத்து வேறுபாட்டிற்குக் கூட போராட்டம் ,கலவரம்,பொதுச் சொத்தை அழித்தல் ,என மக்கள் பண்பாடின்றி தவறான பாதையில் நெடுந் தூரம் கடந்து வந்து விட்டார்கள். உண்மையில் மக்களுக்கு இந்தப் பாடத்தைக் கற்பித்ததே அரசியல் தலைவர்கள் தான். காலம் மாறும் போதும் ,சூழ்நிலை வேறுபடும்போதும் ,சிலசமயங்களில் ஒருவருடைய தந்திரமே அவருக்கு எதிராகச் செயல்படும் .இதைதான் நம் முன்னோர்கள் தன் வினை தன்னைச் சுடும் என்று நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள் ..
மாணவர்கள் செய்ததைக் கூட மன்னித்து மறந்து விடலாம். ஆனால் மாநில அமைச்சர் ஒருவர் இன்னொருமுறை தாக்கினால் தாக்கியோரின் கைகள் முறிக்கப்படும் என்று பகிரங்கமாகச் சூளுரைத்தார். மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டிய ஒரு அமைச்சர் இப்படிச் சொன்னால் அவர் என்ன அமைச்சரா இல்லை ஒரு ரௌடியா ?
ஜனநாயகத்தில் மக்கள் எல்லோரும் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்க முடியாது. எதிர்க் கட்சியைச் சாரந்தவர்களும் அவர் நாட்டு குடிமக்களே .அவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப் படும் அமைச்சர்களுக்கு இருக்கிறது..
அமெரிக்காவில் போஸ்டன் நகரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து விட்டார்கள் . சிலர் இறந்துபோனார்கள் பலருக்கு பலத்த காயம். அப்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவார்கள் என்று மட்டுமே சொன்னார். அதுதான் அரசியலில் இருப்போருக்கு நயத்த நாகரிகம் . நம்மவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய நல்ல பாடத்தையெல்லாம் விட்டு விடுவார்கள் . அவர்களே தவறான முன் உதாரணமாக இருக்கும் போது ,மக்களின் தவறான போக்கிற்கு அவர்களைத் தண்டிப்பதை விட தங்களையே திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.
No comments:
Post a Comment