Thursday, April 25, 2013

Short story

சிறுகதை
நட்பின் நகைப்பு
இரண்டு பள்ளித் தோழர்கள். வகுப்பைக்கட்’டடித்துவிட்டு சினிமா பார்த்தல்,சீட்டாடுதல், இவற்றால் நட்பு இறுக்கமாகின்றது.சின்னத் சின்னத் திருட்டு .பெண்களிடம் சில்மிஷம் என்று இருவருமே இளமைக் காலத்தில் சில தவறுகளைச் செய்கின்றார்கள்.ஒருவன் படித்து விட்டு வழக்கறிஞராகின்றான்.மற்றொருவன் நூற்பாலையில் வேலையில் சேர்ந்தான் .முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திருமண வீட்டில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது .வக்கீல் இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி என்பதால் அவருக்கு தனி மரியாதை .இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வந்த பழைய நண்பனை யாரோ எனத் தெரியாதவர் போல நடந்து கொண்டார்.மறந்து மறைத்து விட்ட இளமைக்காலத் தவறுகளை எங்கே நடு வீட்டில் கொட்டி விடுவாரோ என்று நீதிபதி அப்படி நடந்து கொண்டார் என்பதை விவரம் புரிந்த அந்த நண்பன் தானும் தெரியாதவன் போல ஒதுங்கிக் கொண்டான். கெட்டி மேளச் சத்தத்தில் நட்பின் நகைப்பு யாருக்கும் கேட்கவில்லை   

No comments:

Post a Comment