Monday, April 8, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

ஒரு புதிய ஆட்டோ வாங்கி கொஞ்ச நாள் நானே டிரைவராக ஓட்டி வந்தேன் .வண்டியில ஒரு பிரச்சனையும் இல்லை. கையில் கொஞ்சம் காசு கூடச் சேர்ந்தது. தொழிலை விருத்தி செய்ய நினைத்து ஆட்டோ ஓட்ட ஒரு டிரைவர் சேர்த்தேன். அவ்வளவுதான் வண்டியில ஒவ்வொருநாளும் ஒரு விதமான ரிப்பேர் .தொழில் விழுந்து போச்சு .

பிள்ளை கூப்பிட்டான் என்று குடும்பத்தோட அமெரிக்கவிற்குச் சென்றோம் .வீட்டையும் தோட்டத்தையும் பார்த்துக் கொள்ள ஒரு ஆளை நியமித்துவிட்டுத்தான் போனோம் .ஆறுமாதம் கழித்து திரும்பி வந்தபோது வீடு பூட்டியபடி பூட்டியிருந்தது .ஆனால் வீட்டிக்குள்தான் பொருளேதுமில்லை.தோட்டத்தில் செடிகளெல்லாம் செத்துப் போயிருந்தன.

ஒரு சிற்றுண்டிச்சாலை யொன்றை ஆரம்பித்து நானும் என் மனைவியுமாக நடத்தினோம் .நல்ல லாபம் கிடைத்தது .மனைவி வழிச் சொந்தக்காரர் ,சமையல் வேறு தெரியும் என்பதால் கடையின் பொறுப்பை கொஞ்ச நாள் அவரிடம் ஒப்படைத்தேன் .எல்லாம் போச்சு. கொஞ்ச நாளிலேயே கடையை மூடிவிடக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது .

இப்பவெல்லாம் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு .பாவம் இந்தியாவும் என்னைபோல நஷ்டத்திலும்,கஷ்டத்திலும் தானே தள்ளாடிக் கொண்டிருக்கிறது .ஏன் இந்தியாவை அதன் சொந்தக்காரர்கள் ஆளவில்லையா ,இல்லை ஆள்பவர்கள் தாம் இந்தியாவின் சொந்தக்காரர்கள் என்று நினைக்கவில்லையா?

No comments:

Post a Comment