Thursday, April 18, 2013

Creative thoughts


Creative thoughts

இந்திய மக்களிடம் நேர்மையின்மை வளர்ந்து வருவதை ஏற்றுக்கொண்டாலும் வியாபாரிகளிடம் நேர்மையின்மை மிகுந்து வருவதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.வியாபாரிகளின் நேர்மையின்மையை அனுமதித்தாலும் அதிகாரிகளின் நேர்மையின்மையை அனுமதிக்க முடியவில்லை .அதிகாரிகளின் நேர்மையின்மையை ஒப்புக் கொண்டாலும் காவலர்களின் நேர்மையின்மையை ஒப்புக் கொள்ளமுடியவில்லை .காவலரின் நேர்மையின்மையை ஒத்துக்கொண்டாலும் அரசியல் தலைவர்களின் நேர்மையின்மையை ஒத்துக் கொள்ள முடியவில்லை.இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை பாராட்டத்தான் வேண்டும் .

இந்தியாவில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இழந்தவனுக்கு இழப்பின்றி நீதி கிடைக்க வழியில்லாவிட்டால் குற்றங்கள் குறைவதற்கு வழியில்லை.இழந்தவன் மேலும் இழக்க விரும்பாத போது குற்ற வாளிகளுக்கு அப்போதே குற்றவாளியில்லை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையும் வழங்கப்பட்டு விடுகின்றது .

தன் வீட்டைத் தானே கொள்ளையடிக்கும் போக்கு இந்தியாவில் தான் அதிகம் வளர்ந்து வருகின்றது .

இந்தியாவை ஆள்பவர்கள் திறமையற்றவர்களாகவும் சுகவாசிகளாகவும் இருக்கின்றார்கள் .யாருக்கும் நாட்டுக்காக உண்மையாக உழைக்கும்
திண்ணிய மனமில்லை .எல்லாம் தானாகச் சரியாகி விடும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றார்கள் .எதிர்பாராத எதிர்ப்புகளினால் தன் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்திலேயே பதவிக் காலம் முழுவதையும் கழிப்பதால் ,நாட்டைப் பற்றிய சிந்தனைகள் எதுவும் வருவதில்லை.

இந்தியாவின் பாவம் அதன் அரசியல் தலைவர்களே

எவ்வளவோ வளர்ந்த நாடுகளிடமிருந்து கடன் வாங்கியும் ,எவ்வளவோ ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டியும் ,எவ்வளவோ ஆலயங்கள் மூலம் இறைவனை வேண்டியும் ,இந்தியா இன்னும் ஏழ்மை நாடுகளின் பட்டியலில் தான் இருந்து கொண்டிருக்கின்றது .இங்கே ஊழல் அதிகம் ,நேர்மையில்லா அதிகாரிகளும் ,அரசியல் தலைவர்களும் அதிகம்,வெட்டிப் பொழுதும் பேச்சும் மக்கள் அதிகம் ,பதிவு செய்யப்படாத குற்றங்கள் அதிகம் ,கட்டுப்பாடில்லாதவாழ்க்கை முறை அதிகம் ,வீதியெங்கும் குப்பைகள் அதிகம்,கழிவு நீர் ஓடைகள் அதிகம், நோய்கள் அதிகம் ,மனித விபத்துகள் அதிகம் .இன்னும் இந்தியா தவறான பாதையில்தான் முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதைப் பரை சாற்றிக் கொண்டிருக்கின்றன .

 

No comments:

Post a Comment