Micro aspects of developing inherent potentials
ஒவ்வொருவருக்கும் பலவிதமான விருப்பங்கள் இருக்கலாம். இந்த விருப்பங்களின் தன்மையும் அளவும் கூட காலத்திற்கு ஏற்ப மாறுபடலாம் .சில விருப்பங்கள் மறைந்து போக, வேறு சில புதிய விருப்பங்கள் தோன்றலாம்.பலர் விருப்ப வேண்டும் என்பதற்காகவே விருப்பங்களை கொள்வதும், மற்றவர்களுக்காகக் கொண்டது போல நடிப்பதும் போலியான விருப்பங்களை வாழ்நாள் முழுதும் சுமந்து கொண்டிருப்பார்கள் .இந்த விருப்பங்களை ஏன் கொண்டிருக்கின்றோம்? எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியவே தெரியாது. தன்னுடைய விருப்பங்கள் எல்லாம் தானாக நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.போலியான இந்த விருப்பங்கள் கடைசி வரை நிறைவேறா விருப்பங்களாகவே இருந்து அவர்களோடு இறுதியில் உடன்கட்டை ஏறுகின்றன. இப்படிப்பட்டவர்கள் தங்கள் தோல்வியின் காரணத்தை அடுத்தவர்கள் மீது சுமத்திவிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் .
ஒரு விருப்பம் ஆழ்விருப்பமாக உருமாறும்போதுதான் அது தொடர்பாக சுய முயற்சிகள் மெல்லத் தலைதூக்குகின்றன .ஆனால் இருக்கும் எண்ணிலாத் தடைகளைத் தாண்டி விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒருவர் அதற்கேற்பத் தன் தகுதிப் பாட்டை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.மாற்றத்தில் மனம் கொண்டுள்ள ஆர்வம் மற்றும் நம்பிக்கையின் விளைவாக தகுதிப்பாடு இருப்பதால் முன்னேற்ற நடவடிக்கைகளில் பின்னேறிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.சுய முன்னேற்றத்தில் தூரதிர்ஷ்டவசமாக வேலை செய்பவனும் ,கட்டளை இடுபவனும் ஒருவனாக இருப்பதால் கட்டளையை நிறைவேற்றாவிட்டாலும் தண்டனை இல்லாமற் போய் விடுகின்றது இவர்கள் பொதுவாக கால வரம்பை வரம்பின்றி நீட்டிக் கொண்டு குற்றச் சாட்டிலிருந்து தப்பிக்க முயல்வார்கள்.அதனால் அவர்கள் விருப்பம் நிறைவேறும் நாள் தள்ளி வைக்கப்பட்டு தள்ளி வைக்கப் பட்டு அவர்களுடைய வாழ்நாளில் நிறைவேறும் வாய்ப்பை இழக்கின்றது. தகுதிப் பாடின்றி விருப்பத்தை வளர்த்துக் கொண்டு போராடுபவர்கள் பெரும்பாலும் தங்கள் முயற்சியில் தோற்றுப் போகின்றார்கள். தகுதிப்பாடு முழுமையாக இல்லாத போது மனதில் பயம் வந்து தங்கி விடுகின்றது. இந்த பயமும்,ஆழ்விருப்பமும் ஒன்றுக்கொன்று நேர் எதிராகச் செயல்படுவதால் ஒருவரை வெவ்வேறு வழிகளில் ஊக்குவிக்கின்றன. முன்னுக்கும் செல்ல முடியாமல்,பின்னுக்கும் செல்ல விருப்பமில்லாமல் இயக்கமில்லா ஒரு மந்த நிலை ஏற்பட,அவர் செயல்லிழந்து விடுகின்றார். பயம் என்பது தகுதிப்பாடின்மை தந்த துணிச்சல் என்பதை உணர்ந்து கொண்டால்,பயம் வருவதற்கு முன்னரே தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் ஒருவேளை உருவாகலாம்.
No comments:
Post a Comment