Creative
thoughts
காலஞ் செல்லச் செல்ல மனிதர்களின் அகமும் புறமும் அதிகமாக வேறுபடுகின்றன . இது இறுதியில் ஒட்டுமொத்த அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறைமுகமாக எச்சரிக்கும் ஒரு காரணியாக இருக்கின்றது .
ஒருவர் வாழும் காலத்தில் அவருக்காவது ஒளிவிளக்காக இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் அவர் யாருக்குமே வழி காட்ட முடியாது போவதுடன் எப்போதும் இருளில் இருக்கவேண்டியதுதான்.
நாம் நமக்கும் பிறருக்கும் உதவத் தேவையான தகுதிகளைப் பெற கல்வி கற்கின்றோம் .பிறர் நமக்கு உதவுவதற்காகப் படிக்கவில்லை .அதற்குப் படிக்க வேண்டிய அவசியமே யில்லை .
வாழ்கையில் ஏன் துன்பமும் இறப்பும் வருகின்றது ? கிடைத்தது போதும் என்று அமைதியாக வாழாமல் மேலும் மேலும் கேட்பதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதற்குத்தான்.
பேச்சுவழக்கில் நாம் பலவற்றை ஒப்புக்கொள்கின்றோம் ஆனால் செயல் நிலைக்கு வரும்போது நாம் ஒப்புக்கொண்டதை நாமே ஏற்றுக்கொள்வதில்லை.
ஓர் அழகான பெண்ணை யானையைப் பார்த்து ரசிப்பது போல ரசிக்கலாம் .தப்பில்லை.ஆனால் ரசித்ததையெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ள ஆசைப்படக் கூடாது .
சம்பாதித்து உலகத்திலே பெரும் செல்வந்தனாக ஆக ஆசைப்படலாம் தப்பில்லை ஆனால் சேர்த்ததையெல்லாம் சேமித்து வைக்க ஆசைப்படக் கூடாது .
.
No comments:
Post a Comment