விண்வெளியில் உலா –ஒப்ஹிசூயெஸ்
(Ophiuchus)
பாம்பைக் கையில் பிடித்து வைத்திருப்பவர் போலத் தோன்றுவதாக இவ் வட்டாரத்தைக் கருதுவர் .இது வடக்கில் ஹெர்குலஸ்லிருந்து பேரண்ட நடுவரைக் கோட்டைக் கடந்து தெற்கில் ஸ்கார்பியஸ் வரை விரிந்துள்ளது. இது மருத்துவத்திற்கான கிரேக்க கட வுளான அஸ்கலாபியஸ்யைக் (Asclapius) குறிப்பிடுவதாகக் கூறுவார்கள். இதுவே பிற்காலத்தில் மருத்துவ முறைகளுக்கான ஒரு குறியீடாக விளங்கியது.
.இவ்வட்டாரத்தின் தோற்றப் பிரகாசம் மிக்க விண்மீனான ராஸ் அல் ஹக்(Ras
al hague) எனப்படும் ஆல்பா ஒப்ஹியூச்சியின் தோற்ற ஒளிப்பொலிவெண் 2.1 ஆகும் .அரேபிய மொழியில் இதற்கு ‘பாம்பாட்டியின் தலை’ என்று பொருள் .இது 47 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது .
இவ் வட்டாரத்தின் பிற விண்மீன்கள் -84 ஓளி ஆண்டுகள் தொலைவில் 2.43 தோற்ற ஒளிப் பொலிவெண் ணுடன் சபிக் (Sabik) என்ற ஈட்டா ஒப்ஹியூச்சி யும் 458 ஒளி ஆண்டுகள் தொலைவில்
2.54 ஒளிப் பொலி வெண் ணுடன் கூடிய ஹான் (Han) என்ற சீட்டா ஒப்ஹியூச்சியும் ,170 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.73 ஒளிப் பொலி வெண் ணுடன் யெட் பரியார்(Yed prior) என்ற டெல்டா ஒப்ஹியூச்சியும் 82 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.76 ஒளிப் பொலி வெண் ணுடன் சிபல்ராய் (Cebelrai) என்ற பீட்டா ஒப்ஹியூச்சியும் ,108 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.23 ஒளிப் பொலி வெண் ணுடன் யெட் போஸ்டீரியர் (Yed Posterior) என்ற எப்சிலான் ஒப்ஹியூச்சியும் 166 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.82 ஒளிப் பொலி வெண் ணுடன் மார்பிக் (Marfik) என்ற லாம்டா ஒப்ஹி யூச்சியும் உள்ளன .கெப்பா ,தீட்டா ,அப்சிலான் ,காமா ஒப்ஹியூச்சி விண்மீன்கள் முறையே 86,563,153,95 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் 3.19,3.27,3.32,3,75 தோற்ற ஒளிப் பொலி வெண் ணுடனும் அமைந்துள்ளன .
தேள் வடிவ வட்டாரத்திலுள்ள அண்டாராஸ்க்கு வடக்காக ரோ ஒப்ஹியூச்சி என்ற பல விண்மீன்களாலான
இணை விண்மீன் உள்ளது .இதில் 4.6 ஒளிப்பொலிவெண் ணுடைய ஒரு B வகை விண்மீன் அகன்ற இடைவெளியுடன் ஒளிப்பொலிவெண் 6.8 .மற்றும் 7.3 உடைய இரு துணை விண்மீன்களைப் பெற்றுள்ளது .தொலை நோக்கி ,முதன்மை விண்மீன் 5.7 ஒளிப் பொலி வெண் ணுடன் கூடிய நெருக்கமான ஒரு துணை விண்மீனைக் காட்டியுள்ளது .இந்த நான்கு விண்மீன்களும் V வடிவ த் தொகுப்பாக உள்ளன .இது IC 4604 என்று பதிவு பதிவு செய்யப்பட்ட ஒரு நெபுலாவில் புதைந்திருக்கின்றது
No comments:
Post a Comment