சொன்னதும் சொல்லாததும்
சர் எட்வர்டு விக்டர் ஆப்பிள்டன் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி .முதல் உலகப் பெரும் போரில் தீவிரமாகப் பணியாற்றி விட்டு காவெண்டிஷ் சோதனைக் கூடத்தில் செய்முறைப் பயிற்சியாளராகச் சேர்ந்தார் .விரைவிலேயே காவெண்டிஷ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார் . இவர் மின்னணுவியல் துறையில் செய்திப் பரிமாற்றத் தொழில் நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தார் .அவர் மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சிகள் தொலைத் தொடர்பு முறைக்கு வழிகாட்டியது .ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒலி பரப்பி () மூலம் ரேடியோ சமிக்கை அலைகளைச் புற வெளியில் செலுத்த அதன் செறிவு பகல் பொழுதில் ஏறக்குறைய மாற்றமின்றியும் ,இரவில் குறிப்பிடும் படியான மாற்றத்துடனும் இருப்பதைக் கண்டறிந்தார் .தரை வழி கடந்த சமிக்கை அலையும் .விண் வழி கடந்து எதிரொளிக்கப்பட்ட அலையும் குறுக்கிடுவதால் இப்படி நிகழ்கிறது என்பதை அறிந்து அதன் மூலம் புவி வளி மண்டலத்தின் எல்லையில் அடுக்குகளில் அயன மண்டலம் இருப்பதையும் அதில் பல அடுக்குகள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.இதை அவர் பெயராலே ஆப்பிள் டன் அடுக்கு என்று குறிப்பிடுகின்றார்கள்.இவர் செயலாற்றும் திறமையை விட ஆர்வம் முக்கியமானது என்று கூறுவார்.ஆர்வம் இருந்தால் போதும் செயலாற்றும் திறமை மட்டுமின்றி இயலாது என்று முடிவு செய்ததைக் கூட இயலும் படி செய்யமுடியும் .
No comments:
Post a Comment