நல்லதோர் சமுதாயம் படைப்போம்
அன்பு காட்ட அன்பு காட்டப்படுகின்றது
அதைகண்டு வளரும் குழந்தைகளும்
அன்பு செலுத்தி மகிழக் கற்றுக்கொள்கிறன
அறம் செய்ய அறமே செய்யப்படுகின்றது
அதைக் கண்டு வளரும் குழந்தைகளும்
அறம் செய்து மகிழக் கற்றுக்கொள்கிறன
நல்லது நினைக்க நலமே விளைகிறது
அல்லது செய்ய அமைதி குலைகிறது
மன்னித்து மறக்க குற்றங்கள் குறைகிறது
பகைத்துக் கொள்ள குற்றங்கள் கூடுகின்றது
நேர்மை பின்பற்ற நேர்மை பின்பற்றப்படுகின்றது
அதைக் கண்டு வளரும் குழந்தைகளும்
நீதிக்கு தலை வணங்க கற்றுக்கொள்கிறன
உழைத்து வாழ உழைப்பு விரும்பப்படுகின்றது
அதைக் கண்டு வளரும் குழந்தைகளும்
உழைத்து வாழவே விருப்பங் கொள்கிறன
பாராட்டி வாழத்த பாராட்டு விஞ்சுகிறது
திட்டித் தீர்க்க வெறுப்பே மிஞ்சுகிறது
சொல்லிக் கொடுக்க கற்றுக் கொள்கிறது
கற்றுக் கொண்டு சொல்லிக் கொடுக்கிறது
No comments:
Post a Comment