தனுசு இராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும் -சக்கிடாரியஸ்
குதிரை உடல் கொண்ட மனிதன் வில்லேந்தி அம்பு எறிவது போல இந்த வட்டார விண்மீன்கள் கற்பனை செய்யப்பட்டுள்ளன .வெறும் கண்களுக்கு 115 விண்மீன்களும் விண்ணுருப்புக்களும் தென்படுகின்றன .
தனுசு இராசிக்குரிய நட்சத்திர மண்டலமான இது ஸ்கார்பியோ விற்கும் காப்பரி கார் ன் னுக்கும் இடையே உள்ளது .கதிர் வீதியில் நகர் வலம் வரும் சூரியன் இவ்வட்டாரத்தில் டிசம்பர் 18 முதல் ஜனவரி 19 வரை தங்கி இருக்கிறது .வில்லைக் கண்டுபிடித்தவரும் கிரேக்க கடவுளுமான பானின் மகனான குரோட்டஸ் கையில் வில்லை ஏந்தி தேளாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள அண்டையிலுள்ள ஸ்கார்பியோ வட்டார விண்மீன் கூட்டத்தை நோக்கி அம்பு தொடுப்பதாக கிரேக்க புராணங்கள் தெரிவிக்கின்றன .
நமது பால் வழி மண்டலத்தின் உள்ளகம் இருக்கும் அதே திசையில் சக்கிடாரியஸ் வட்டாரம் அமைந்துள்ளது .பொதுவாக ஓர் அண்டத்தின் மையத்தில் அடர்த்தியாக விண்மீன்கள் செரிவுற்றிருக்கும்
அதனால் சக்கிடாரியஸ் வட்டாரம் செறிவாக விண்மீன்கள் நிறைந்து காணப்படுகின்றது .இதிலுள்ள காமா ,எப்சிலான்,டெல்டா, லாம்டா, பை ,சீட்டா ,சிக்மா மற்றும் டௌ சக்கிடாரி மூடியுடன் கூடிய ஒரு தேநீர் கெண்டி போலத் தோற்றம் தருகிறது.லாம்டா, பை, சீட்டா ,சிக்மா மற்றும் டௌ சக்கிடாரி விண்மீன்களெல்லாம் ஒன்று சேர்ந்து பால் காய்ச்சும் அகப்பை போலக் காட்சி தருகிறது .பால் வழி மண்டலத்தின் பசுமையான பகுதியில் இது அமைந்திருப்பதால் பால் காய்ச்சும் அகப்பையாகக் குறிப்பிடப்பட்டது
அர்காப் பிரியார் (Arkab prior) என்ற பீட்டா சக்கிடாரி பல விண்மீன்களால்லான ஓர் இணை விண்மீன் .இதிலுள்ள விண்மீன்கள் வெவ்வேறு தொலைவுகளில் இருப்பதால் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை .சாதரணமாக வெறும் கண்களுக்கு இது 4 மற்றும் 4.3 ஒளிப்பொலிவெண் கொண்டு அகன்ற இடைவெளியுடன் கூடிய இரு விண்மீன்கள் போலத் தெரிகிறது .பிரகாசமிக்க பீட்டா 1 க்கு குறுகிய இடைவெளியில் 7 ஒளிப்பொலிவெண் கொண்ட ஒரு விண்மீன் உள்ளது .
இவ்வட்டாரத்தில்
பிரகாசமிக்க விண்மீன் ஹாஸ் ஆஸ் ட்
ராலிஸ் என்ற எப்சிலான் சக்கிடாரி
ஆகும் .இதன் தோற்ற ஒளிப்
பொலி வெண் 1.8 ஆக உள்ளது .இவ்வட்டாரத்தில்
எண்ணிறைந்த தனித்த மற்றும் கோளக்
கொத்து விண்மீன் கூட்டங்களும் சில நெபுலாக்கலும் காணப்படுகின்றன .
No comments:
Post a Comment