தங்கத்தின் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டது என்றும் எனவே தங்கத்தின் பயன்பாட்டை இந்திய மக்கள் குறைந்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மன் மோகன் சிங் அவர்களும் நிதி அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களும் கூறியுள்ளார்கள் .அரசின் அனுமதி இன்றி தனி நபர் யாரும் தங்கத்தை இறக்குமதி செய்துகொள்ள முடியாது. அன்னியச் செலவானிக்கும்,தங்கத்தின் இறக்குமதிக்கும் அனுமதி கொடுத்து விட்டு,அதன் பின் விளையும் விபரீத விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்வது போல இது இருக்கிறது. அனுமதி கொடுக்கும் போதே அதனால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இதை விட முக்கியமான பல அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் .ஆனால் மிகச் சிறந்த பொருளாதார மேதைகள் என்ன செய்தார்கள் என்பதுதான் தெரியவில்லை .இந்தியாவில் இது மட்டுமல்ல ,பெரும்பாலும் பல விஷயங்களில் வரும் முன் காப்போம் என்ற நிலைப்பாடு பின்பற்றப்படுவதேயில்லை .வந்த பின் அதற்கு புறத்தே காரணம் தேடுவதே பழக்கமாகப் போய்விட்டது.இதில் ஏற்படும் கருத்துச் சண்டையில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்பவர்கள் தான் இன்றைக்கு அதிகரித்துக் கொண்டு வருகின்றார்கள் .ஆனால் இந்தியர்களாகப் பிறந்த ஒரு பாவத்தைத் தவிர ஒன்றும் செய்யாத அப்பாவி மக்கள் படும் தொல்லைகளுக்கு அளவேயில்லை.
No comments:
Post a Comment