Micro aspects of
developing inherent potentials
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சி,தேவைகளில் தன்னிறைவு நாடு மற்றும் தனி மனித ,வாழ்க்கைக்கு பாதுகாப்பு என்று கூறலாம் .பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் இயற்கை வளம்,தொழில் உற்பத்தி போன்றவற்றைச் சரியாகவும் ,முறையாகவும் பயன்படுத்திக் கொள்ளவும் ,திறனைப் பெருக்கவும் தேவையான கல்வி யறிவு .நாட்டின் இயற்கை வளம் என்பது அந்நாட்டிலுள்ள கனிம வளம்,நீர் வளம்,கடல் வளம் ,எரிபொருள் மற்றும் மின்சார வளம் ,வன வளம் போன்றவைகளாகும் .இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள அறிவு,ஆராய்ச்சி,மேலாண்மை போன்றவை தேவை.இதில் ஏற்படும் குளறுபடிகள் நம்மை முன்னேற்றப் படிகளில் பின் தள்ளி விடுகின்றன .
உற்பத்தி என்பது வேளாண் உற்பத்தியும்,தொழில் துறை உற்பத்திகளுமாகும். உற்பத்தி குறைய மக்கள் தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் போவதுடன் ,ஏற்றுமதியின்றி அன்னியச் செலவாணியும் குறைந்து , தேவைப்படும் இறக்குமதியையும் குறைக்கவேண்டிய
கட்டாயம் ஏற்படும் .மக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைய இது வழி வகுப்பதால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தவறான வழிமுறைகளை நாட அதுவே நாட்டிற்கு பெருஞ் சிக்கலாக இருக்கும் .இது தனிமனிதப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும்மக்கள் தொகைப் பெருக்கம் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடை என்று பலர் தவறாக நினைக்கின்றார்கள் .மிகுதியான மக்கள் என்பது மிகுதியான மனித வளம் .பிற வளங்கள் எல்லாவற்றையும் திறம்படக் கையாளுவதற்கு இந்த மனித வளமே இடையூடகமாக இருக்கிறது.பிற வளங்களிலிருந்து நாம் பெரும் பயன்கள் யாவும் மனித வளத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது .மனித வளம் இருந்தும் முன்னேறாமல் அதுவே ஒரு தடை என்று நினைத்தால் ,மனித வளத்தை பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு மேம்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை ..
No comments:
Post a Comment