Saturday, July 27, 2013

Vethith Thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-டின்-பிரித்தெடுத்தல் 
இதை வெள்ளீயம்(tin) என்றும் கூறுவார்கள். இது மிக அரிதாக உலோக நிலையில் காணப்படுகின்றது .இதன் முக்கிய த் தாது வெள்ளீய ஆக்சைடான வெள்ளீயக்கல் (tin stone) ஆகும் .இது மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகமாகக் கிடைக்கின்றது .பிற தனிமங்களை ஒப்பிட வெள்ளீயம் அரிதாகக் கிடைக்கும் தனிமமாகும் .பூமியின் மேலோட்டுப் பகுதியில் தனிமங்களின் செழுமை வரிசையில் இது 50 ஆக உள்ளது .
வெள்ளீய க் கல்லைப் பொடியாக்கி நீரோட்டத்தில் சலிக்கும் போது இலேசான மண் பொருட்கள் நழுவிச் சென்றுவிடுகின்றன .காற்றோடத்துடன் ஒரு மின்னுலையில் இதை வறுக்கும் போது கந்தகம் ஆர்செனிக் போன்ற வேற்றுத் தனிமங்கள் ஆக்சிஜனேற்றம் பெற்று வளிமமாக வெளியேறி விடுகின்றன.கால்சியத் தாதுவை அதன் ஊடாகச் செலுத்தி ஒரு மின் காந்தம் வழியாகக் கடந்து செல்லுமாறு செய்து இரும்பு ஆக்சைடு,டக்ஸ் டன் போன்ற வேற்றுப் பொருட்களையும் நீக்கலாம் அதன் பிறகு அதனெடையில் 5 ல் ஒரு பங்கு நிலக்கரியைச் சேர்த்து எதிர் அனல் உலைreverberatory furnace) மூலம் ஆக்சிஜநீக்கம் செய்யலாம் .வெள்ளீயத்தை உருக்கி மென்மையாகச் சூடுபடுத்தப்பட்ட ஒரு சாய்மானத் தளத்தில் நழுவிச் செல்லுமாறு விட ,தூய வெள்ளீயம் மட்டும் வழிந்தோட எஞ்சிய வேற்றுப் பொருட்கள் பின்தங்கி விடுகின்றன .
பண்புகள் 
இதன் வேதிக் குறியீடு Sn  ஆகும் .இதன் அணுவெண் 50 அணு நிறை 118.69 ,அடர்த்தி 7280 கிகி/கமீ .உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 505.1 K ,
2873 K ஆக உள்ளன .இதன் உருகு நிலை சாதாரண உலோகங்களைக் காட்டிலும் குறைவானது .
டின் என்ற பொருள்படும் ஸ்டாம் (Stannum) என்ற சொல் இலத்தீன் மூலமாகும் .இதற்கான அடிச்சொல் கடினத்திண்மம் என்ற பொருள்படும் ஸ்டான் என்ற வடமொழிச் சொல்லாகும் . வெள்ளீயம் மெல்லிய நீலம் பாய்ந்த வெள்ளி போன்ற வெண்ணிறங் கொண்டது .இது துத்தநாகத்தை விட மென்மையானது .ஈயத்தை விடக் கடினமானது .மெல்லிய தகடாக அடித்துப் பயன்படுத்த முடிகிறது என்பதால் இதைத் தகர உலோகம் என்பர் .தூய காற்று வெளியில் வெள்ளீயம் நிலையானது.வெண்தீயில் நீல நிறச் சுவாலையுடன் எரிகின்றது.குளோரின், கந்தகத்துடன் உடனடியாக வினைபுரிகின்றது.குளிர்ச்சியான நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் மெதுவாகக் கரைகிறது.சூடான அடர் அமிலங்களில் விரைந்து கரைகின்றது .அடர் கந்தக அமிலத்தில் சல்பர் டை ஆக்சைடையும் ,நீர்த்த கந்தக அமிலத்தில் ஹைட்ரஜனையும் வெளிவிடுகின்றது .

வெள்ளீயம் வெப்ப நிலைக்கு ஏற்ப மூன்று வெவ்வேறு படிக  நிலைகளில் இருக்கிறது .இதை வேற்றுரு(allotropy) என்பர்.றை வெப்ப நிலையிலிருந்து 

202 0C  வரை நிலையாக இருக்கும்  .வெள்ளீயத்தை வெண் வெள்ளீயம் (white tin) என்றும் பீட்டா டின் என்றும் கூறுவர்.இது டின்னின் இயல்பு நிலையாகும் .அடித்து நீட்டக் கூடிய இது நான்முகி(tetragonal) படிக உருவங் கொண்டுள்ளது.இதை வளைக்கும் போது படிகத் தளங்கள் ஒன்றோடொன்று உராய்வதால் கிரீச்சொலி (tin cry) எழும்புகிறது .வெள்ளீயக் கலப்பு உலோகங்களில் இக் கிரீச்சொலி ஏற்படுவதில்லை .13 0C  வெப்ப நிலைக்கு கீழே வெள்ளீயம் கனச் சதுர படிக உருவங் கொண்டு பழுப்பு வெள்ளீயம் (gray tin) அல்லது ஆல்பா டின் ஆக மாறுகின்றது .இந் நிலையில் வெள்ளீயம் உலோகப் பண்புகளை இழந்து குறைக் கடத்தியாகி விடுகின்றது.202 0C  வெப்ப நிலைக்கு அப்பால் வெள்ளீயம் ரோம்பிக் வெள்ளீயம் (rhombic tin) என்ற வேற்றுருவைப் பெறுகின்றது .

No comments:

Post a Comment