Wednesday, July 10, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potentials

சில திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் பூரண நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும்.ஒருவருடைய செயல்பாடுகள் எதுவானாலும் அவற்றில் ஒரு நிறைவான ஒழுங்குமுறை வெளிப்பட்டுத் தோன்றுவதற்கு இது காரணமாய் இருக்கின்றது .திடீரெனத் தோன்றும் கணப்பொழுது நம்பிக்கையே நம்பமுடியாத அளவிற்கு வெற்றியை தரும் பொழுது ,அசைக்க முடியாத பரிபூரண நம்பிக்கை உள்ளுக்குள் ஊறியிருந்தால் வாழும் ஒவ்வொரு கணமும் வெற்றிதான்.
‘என்னால் முடியும்’ என்று பிறர் முன்னே வீராப்பாய் பேசுவது நம்பிக்கையில்லை .ஏனெனில் நம்பிக்கையின் முகவரி வெறும் வார்த்தைகளில் இல்லை.பரிபூரண நம்பிக்கை ஒருபோதும் வார்த்தைகளில் அடங்கிவிடுவதில்லை.அது உண்மையிலேயே ஒருவர் கொண்டிருக்கும் தனித் திறமைகளின்  செறிவைப் பொறுத்தது. மனதில் நம்பிக்கை இருந்தால்தான் செயல்களிலும் அது பிரதிபலிக்கும் . திட்டமிட்ட பரிபூரண நம்பிக்கை என்பது ஒருவருடைய அறிவாற்றல் ,நினைவாற்றல் ,உடல் வலுவாற்றல் ,சிந்தனை யாற்றல் ,செயலாற்றல் ,ஒழுக்கம் ,நேர்மை ,தைரியம் போன்றவற்றால் வளர்சிபெறுகின்றது.
   

ஒருவருடைய சுய மதிப்பு பிறரால் உயர்வாக எண்ணப்படும் சூழ்நிலையை அவரே உணருமாறான ஒரேயொரு நிலையில் கூட  இந்த நம்பிக்கை மலைபோல வளர்ந்துவிடுகின்றது .

No comments:

Post a Comment