வேதித் தனிமங்கள் -இண்டியம் -கண்டுபிடிப்பு
நிறமாலை மூலம் கண்டறியப்பட்ட தனிமங்களுள் இன்டியமும் ஒன்று .ஜெர்மனி நாட்டின் இயற்பியலாரான ரெயிச்(F.Reich) மற்றும் ரெச்சிடர்(Th.Richter) இருவரும் 1863 ஆம் ஆண்டில் ஒரு சோதனைக்குத் தேவையான தாலியத்தைப் பெற முயன்றனர். .துத்தநாகத்தின் கனிமத்தில்,கந்தகம்,ஆர்செனிக்,ஈயம்,சிலிகான்,மாங்கனீஸ்,வெள்ளீயம் மற்றும் காட்மியம் எனப் பல தனிமங்கள் சேர்ந்திருந்ததால் அதில் தாலியமும் இருக்கலாம் என இவர்கள் நம்பினார்கள்.அதனால் அப்பகுதியில் கிடைத்த துத்தநாகத்தின் கனிமத்தை பகுத்தாராய்ந்தனர் .நீண்ட நாட்கள் முயன்றும் அவர்கள் எதிர்பார்த்த தனிமம் கிடைக்கவில்லை.ஆனால் வெளிர் மஞ்சள் நிறத்தில் எதோ ஒரு சேர்மத்தின் வீழ்படிவு கிடைத்தது .அப்போது ஜெர்மானிய உலோகத்தைக் கண்டுபிடித்த விங்லர் அதைப் பார்த்துவிட்டு அது ஒரு புதிய தனிமத்தின் சல்பைடாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதன் பிறகு ரெயிச் தன் உதவியாளருடன் சேர்ந்து அதை நிறமாலைக்கு உட்படுத்திப் பார்த்த போது அதில் பிரகாசமான நீல நிற வரிகள் இருப்பதைக் கண்டனர் .எனினும் சீசியமும் இது போல நீல நிற வரிகளை நிறமாலையில் தர வல்லது என்பதால் முதலில் குழம்பினார் .பின்னர் துத்தநாகத்தின் கனிமத்தில் ஒரு புதிய தனிமம் சேர்ந்திருக்கின்றது என்றும் ,அது அவுரி நீலப் பகுதியில்(Indigo) நிறமாலை வரிகளைத் தந்ததால் இண்டியம் என்றும் பெயரிட்டனர்.இண்டியம் .இரும்பு ,செம்பு ,ஈயத்தின் கனிமங்களிலும் காணப்படுகின்றது .
பண்புகள்
In என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய இன்டியத்தின் அணுவெண் 49 ,அணு எடை 114.82. இதன் அடர்த்தி 7310 கிகி /கமீ .இதன் உருகு நிலையும் உறை நிலையும் முறையே
429.8 K,2273 K ஆகும் .இண்டியம் மிகவும் மென்மையான வெள்ளி போன்ற பொலிவுடன் கூடிய உலோகமாகும் .இதை வளைக்கும் போது டின் போல கிரீச்சொலியை எழுப்புகின்றது.அணுத் தளங்களுக்கு இடையேயான உராய்வு இதற்குக் காரணம் என அறிந்துள்ளனர்.இது காலியம் போல கண்ணாடியை நனைக்கின்றது .
பயன்கள்
இது தாழ்ந்த உருகு நிலை உடைய கலப்பு உலோகங்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றது .24 % இண்டியம் ,76 % காலியம் சேர்ந்த கலப்பு உலோகம் அறை வெப்ப நிலையில் நீர்ம நிலையில் இருக்கின்றது
.இது சுழல் வட்டுக்களுக்கான(ball bearings) உலோகமாகவும்
,ஜெர்மானிய டிரான்சிஸ்டர்,மின்வகைத் திருத்திகள்(Rectifiers),தெர்மிஸ்டர்கள்(Thermistors),ஒளி மின் கடத்திகள் உற்பத்தி முறையில் பயன் தருகின்றது .கண்ணாடியில் ஆவியைப் படியச் செய்து எதிரொளிப்பு அடிகளை உருவாக்க முடிகிறது.இது ஈரக் காற்றாலும் மாறும் வளி மண்டலச் சூழலாலும் அரிக்கப்படுவதில்லை .இண்டியம் மிகச் சிறிய அளவில் நச்சுத் தன்மை கொண்டுள்ளது எனக் கண்டு பிடித்துள்ளனர் .
இண்டியம் -வெள்ளி ,இண்டியம் -ஈயம் ,போன்ற கலப்பு உலோகங்கள் வெள்ளி ,ஈயத்தை விட சிறந்த வெப்பக் கடத்தியாக விளங்குகின்றது
.இண்டியம் ஒளி மின்கலம் உற்பத்தியில் பயன் தருகின்றது
அணு உலைகளில் ,அணுக் கருப்பிளப்பு வினையைக் கட்டுப்படுத்த இண்டியத்தாலான மெல்லிய தாளை வைத்திருப்பார்கள்.அத் தாள் நியூட்ரான்களின் தாக்கத்தினால் கதிரியக்கம் பெறும் .இது எந்த வீதத்தில் பெறுகின்றதோ அதுவே அணு உலைக்குள் நிகழும் பிளப்பு வினையை மதிப்பிடக் கூடியதாக இருக்கின்றது.
No comments:
Post a Comment