விண்வெளியில் உலா
எப்சிலான்(ε) ஹெர்குலிஸ் 8.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.92 தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன்
A 0 வகை விண்மீனாகவும் மியூ(μ) ஹெர்குலிஸ் 2.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.42 தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் G 5 வகை விண்மீனாகவும்,காமா(γ) ஹெர்குலிஸ் 140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.75 தோற்ற ஒளிப் பொலி வெண்ணுடனும் A 9 வகை விண்மீனாகவும் உள்ளன .ரோ(ρ) ஹெர்குலிஸ் தோற்ற இரட்டை விண்மீனாகும்
.நெடிய இடைத் தொலைவுடன் தோற்றத்திற்கு அருகருகே இருப்பதுபோலத் தோன்றுவதால் இது உண்மையான இரட்டை விண்மீனில்லை
.தொலை நோக்கியினால் பகுத்துணரமுடியும் .இவற்றின் ஒளிப் பொலிவெண் முறையே 4.6 ,5.4 ஆகும் .
ஹெர்குலிஸ் வட்டாரத்தில் மிகவும் சிறப்பான M .13, M .92 என்று பதிவு செய்யப்பட்ட இரு கோளக் கொத்து விண்மீன் கூட்டங்கள் உள்ளன .
M .13
வடக்கு வானில் தோற்றத்தில் அரை நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது .23500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் 5 லட்சம் விண்மீன்கள் உள்ளன.அண்டக் கொத்து விண்மீன்கள் போலன்றி இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள் உள்ளன .எனினும் பிரகாசமிக்க விண்மீன்கள் குளிர்ந்த சிவப்பு நிற பெரு விண்மீன்களாக இருக்கின்றன .வெப்பமிக்க நீல நிற விண்மீன்கள் இதில் மிக அரிதாகக் காணப்படுகின்றன .ஒரு சில விண்மீன்கள் நம்முடைய சூரியனைப் போல இருக்கின்றன .
கோளக் கொத்து விண்மீன் கூட்டங்களில் பொதுவாக அதிகத் தொலைவில் மிக அதிக எண்ணிக்கையில் மாறொளிர் விண்மீன்களைக் கொண்டிருக்கும்
M .13 ல் 15 குறுகிய
அலைவு கால சிபிட்ஸ் வகை மாறொளிர் விண்மீன்களை அறிந்துள்ளனர் .
கோளக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 130-300 ஒளி ஆண்டுகள் நெடுக்கைக்குட்பட்ட வெளியில் அடர்த்தியாகச் செறிவுற்றிருக்கும் விண்மீன்கள் உள்ளன .மிகவும் கவனத்தைக் கவருவது என்னவென்றால் இதில் தூசிப் படலங்களோ கரு நிழல் வடிவங்களோ அல்லது படர்ந்து சூழ்ந்து காணப்படும் நெபுலாக்களோ சிறிதும் காணப்படுவதில்லை.மேலும் கோளக் கொத்து விண்மீன் கூட்டங்கள் நிலைப்புத் தன்மை மிக்க கட்டமைப்புக்களாக உள்ளன .அவை எப்படி உருவாயின என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் பல ட்ரில்லியன்
(10 12) ஆண்டுகளுக்கு அவை அடிப்படை மாற்றங்கள் ஏதுமின்றி தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம் .
அயோட்டா(ι) மற்றும் ஈட்டா(η) ஹெர்குலிஸ்சுக்கு மிகச் சரியாக இடையில் M .92 என்று பதிவு செய்யப்பட்ட கோளக் கொத்து விண்மீன் கூட்டமுள்ளது
.இது M .13 ஐ விடவும் அதிகத் தொலைவில் (24000 ஒளி ஆண்டுகள் ) இருக்கின்றது
.இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள் இருப்பினும் M .13 ஐ விட குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.
No comments:
Post a Comment