எழுதாத கடிதம்
பல ஆன்மிக வாதிகள் மக்களுக்கு அறிவுரை வழங்கும் போது பெரும்பாலானோர் ஒன்றை மறந்து விடுகின்றார்கள்
.தனக்குப் பிடித்த துறவறமும் ஆன்மிகமும் தான் இல்லறத்தை விட மேலானது என்று விளக்கிக் கூறுவார்கள்
.அப்படிச் சொல்வது அவர்களுடைய சொந்தக் கருத்து . ஆனால் இல்லறம் கீழானது என்று நினைப்பது போல கருத்துகளைச் சொல்வது தவறாகும் .
" ஆன்மிக வாழ்கையில் நான் பேரின்பம் பெறாமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்க்கையிலா திருப்தியை நாடுவேன் ? எனக்கு அமுதம் கிடைக்காமற் போனால் அதற்காகச் சாக்கடை நீரையா நாடிச் செல்வேன் ? " என்று ஒரு சுவாமிஜி கூறினார் .இதில் அவர் இல்லறத்தை சாக்கடை நீருக்கும் ஆன்மிகத்தை அமுதத்திற்கும்ஒப்பிட்டுப் பேசுவது போல இது தோன்றுகிறது.பிற்ப்பாடு நாம் வேறு விளக்கம் கொடுப்பது வேறு விஷயம் .
இல்லறமில்லையேல் துறவறமில்லை .இல்லறத்தின் மேன்மைக்கே துறவறமும் முயலவேண்டுமே ஒழிய துறவறத்தின் மேன்மையையே துறவறம் விரும்பலாகாது. உண்மையில் துறவறம் இயற்கையில்லை, .இயற்கையில் எங்குமில்லை,இயற்கை விரும்புவதுமில்லை .அது இல்லறத்தை வெறுத்த மனிதர்களின் கண்டுபிடிப்பு.துறவறம் ஒருபோதும் முழுமையாக இருப்பதில்லை .ஏனெனில் எல்லாவற்றையும் துறந்து துறவறத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவன் துறவறத்தைத் துறக்க விரும்புவதில்லை.ஏதோவொன்றில் பற்று நீடித்திருக்கவே செய்கிறது .
மக்கள் இல்லறத்தில் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த ஆன்மிகம் தேவை .அதற்கு இந்த துறவிகள் ஆன்மிகச் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் .பொருள் மீது பற்று உள்ளவர்களால் ஆன்மிகத்தை ஒருபோதும் பரப்ப முடியாது.
No comments:
Post a Comment