எழுதாத கடிதம்
அரசு அதிகாரிகள் பெரும்பாலும் மக்களிடம் எஜமானர்களைப் போல நடந்து கொள்கின்றார்கள் என்று சமீபத்தில் ஒரு நீதிபதி தெரிவித்ததோடு வருத்தப்பட்டார்.இந்த உண்மை நீதித் துறைக்கு காலங் கடந்து தெரியவந்திருக்கின்றது என்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது.அரசு அதிகாரிகளுக்கு எஜமானர்களாக அரசியல் தலைவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பது தெரியுமோ தெரியாதோ .எல்லோரும் இமாலயத் தவறுகளைச் செய்துவிட்டு நல்லவர்கள் போல நடிக்கின்றார்கள்.
அலுவலகத்தில் இருந்து கொண்டே வெளி வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கப் பார்க்கும் போது ,அவை வழிகாட்டுதல் இன்றி ,கண்காணிப்பும் இன்றி மிகுந்த கால தாமதத்துடன் அரைகுறையாக முடிக்கப்படுகின்றது .இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மக்களையே பலிகிடா வாக்குகின்றார்கள் .மக்கள் அலுவலகத்திற்கு வந்துநீண்ட நேரம் காத்திருந்து பார்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் அலையவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்கள் . பணம் கட்டவேண்டிய காரணத்திற்காகவும் .விண்ணப்பத்தை அலுவலத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் மக்கள் அலுவலகத்திருக்கு வந்தால் போதும் .அந்தப்பணியைச் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுடையது .கண்காணிப்புக் காமிராக்கள் அலுவலகத்திற்கு வெளியில் மட்டுமின்றி உள்ளேயும் பொருத்தவேண்டும் என்பதைத்தான் நீதிபதியின் வார்த்தைகள் வலியுறுத்துகின்றன. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிபணியைத் தட்டிக் கழிப்பது சமுதாயத்தின் நலனைச் சீரழிப்பதாகும். மக்களை லஞ்சம் கொடுக்க வைக்க இவர்களுக்குத் தெரிந்த வழி போகாத ஊருக்கு இல்லாத வழி காட்டுவதாகும். .நீதித் துறையாவது இனி மக்கள் நலத்தை முன்னிறுத்தி செயல்படவேண்டும் .எல்லாத் துறைகளும் சீர்கெட்டுப் போய்விட்டால் அப்புறம் என்ன முயற்சி எடுத்துக்கொண்டாலும் பலனளிப்பதில்லை.
No comments:
Post a Comment