விண்வெளியில் உலா –ஹெர்குலஸ்(Hercules)
விண்வெளியில் அதிக தோற்றப் பரப்பை அடைத்துள்ள பெரிய வட்டார விண்மீன் கூட்டங்களுள் இதுவும் ஒன்று .இது பெரியதாக இருப்பினும் அதிக முக்கியத்துவம் பெற்ற விண்மீன்கள் ஏதும் இதில் இல்லை .கிரேக்க நாட்டின் மாவீரன் ஹெர்குலஸ்ஸை பெருமைப்படுத்தும் விதமாக இவ்வட்டாரத்தை அவனாகச் சித்தரித்துள்ளனர் .இதில் 150 விண்மீன்களை இனமறிந்துள்ளனர் .பெரும்பாலானவை வெறும் கணகளுக்குப் புலப்பட்டுத் தெரிகின்றன .இது பூட்டெஸ் வட்டாரத்திலுள்ள பிரகாசமிக்க விண்மீனான ஆர்க்டூரசுக்கும் ,வேகா வட்டாரத்திற்கும் இடையில் அமைந்திருக்கின்றது .ஹெர்க்குலசின் தலை தெற்கில் ஆல்பா ஹெர்குலி ஸால் குறிக்கப்பட
,பாதங்கள் வடக்கத்திய விண்மீன்களால் சித்தரிக்கப்பட்டுள்ளன .மைசினேயின் அரசனை
யுரைஸ்தியஸ்,ஹெர்க்குலஸ்ஸை அழைத்து,ஒருவன் டிராகானைக் கொல்லுமாறு 12 பணியாளர்களை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான் .இந்த டிராகன் அடுத்துள்ள டிராகோ வட்டாரத்தால் சித்தரிக்கப்பட்டுள்ளது
ஹெர்க்குலஸ் வட்டாரத்தில் ஹெர்க்குலிஸ் தனது வலது முழங்காலை மடக்கித் தரையில் வைத்து அமர்ந்து கொண்டு இடது பாதத்தை டிராகனின் தலை மீது வைத்திருப்பது போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது .
இவ்வட்டாரத்தில் ஆல்பா ஹெர்க்குலிஸ்ஸை விடப் பீட்டா ஹெர்க்குலிஸ் தோற்றப் பிரகாசமிக்க விண்மீனாகும் .ராஸ்அல்கீத்தி
(Rasalgethi) என்ற ஆல்பா ஹெர்குலிஸ் 218 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிறப் பெரு விண்மீனாக உள்ளது .ராஸ் அல் கீத்தி என்றால் மண்டியிட்டவன் தலை என்று அரேபிய மொழி பொருள் தருகிறது .இதன் புறப்பரப்பு விரிந்து சுருங்குவதால் இது ஒரு மாறொளிர் விண்மீனாக தோற்ற ஒளிப் பொலி வெண் 3.1 முதல் 3.9 வரையிலான மாற்றத்துடன் விளங்குகின்றது.இது ஒரு M 5 வகை விண்மீனாகும் .இது ஓரியனில் உள்ள பெடல்ஜியூசை விடப் பெரியது .இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 800 மடங்காக உள்ளது .ஆல்பா ஹெர்குலிஸ்ஸிலிருந்து
4.6 வினாடி கோண விலக்கத்தில் மஞ்சள் நிறத் துணை விண்மீன் 5.4 என்ற தோற்ற ஒளிப் பொலி வெண்ணுடன் ஹெர்க்குலிஸ்ஸை 111 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது .இத் துணை விண்மீனே ஒரு நிறமாலை வகை இரட்டை விண்மீனாக உள்ளது .இதன் சுற்றுக் காலம் 52 நாட்கள் என்றும் ,துணை மற்றும் துணைக்குத் துணை விண்மீன்கள் விரிவடையும் வளிம மண்டலங்களைக் கொண்டுள்ளன என்றும் அறிந்துள்ளனர் . கொரின் போரஸ்(Koreneforos) என்ற பீட்டா ஹெர்க்குலிஸ் 102 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப் பொலி வெண் 2.77 உடன் நிறமாலையால் G 8 வகை விண்மீனாக உள்ளது .
No comments:
Post a Comment