Wednesday, July 24, 2013

Creative Thoughts

Creative Thoughts

நிச்சியமான வெற்றிக்கு ஒரு வழிதான் இருக்கிறது. அது என்ன வழி என்று விவாதித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு அக்கணமே செயலாற்ற முனைவதுதான். வெற்றிக்கு மேல் வெற்றிக்கும் எப்போதும் வெற்றிக்கும் இதுதான் முதல் பாடமும் பயிற்சியும் .

விருப்பச் சார்பின்றி எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றிக்கும் தோல்விக்கும் சம வாய்ப்பே இருக்கிறது ,நுண்ணறிவு,செயல்திறன் ,ஆளுமை போன்ற தனித் திறமைகளினால் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசிக்கின்றது.தோல்வி தோல்வியடைந்து வெளியேறுகின்றது .

ஆர்வம் உள்ளார்ந்ததாக இருப்பின் ,செயல் திறன் மிகுந்து செய்யும் வேலையை மிகச் சிறப்பாக செய்து முடிக்கலாம் .வெற்றியை முதலில் நிர்ணயிப்பது இந்த ஆர்வமே .

உள்ளார்ந்த ஆர்வத்தை மனதில் நிலைத்து நிற்கும் ஊக்கக் காரணிகளே தூண்டிவிடுகின்றன .ஊக்கக் காரணிகளை எண்ணத்தில் விதைத்து ,அதன் வளர்ச்சியை பாழ்படுத்தும் வேற்று எண்ணங்களை வேரறுத்து விட்டால் நிச்சியமான வெற்றியை தினமும் அறுவடை செய்யலாம் .


உயிருள்ள உடல் தனக்குத் தேவையான எல்லாவற்றையும் உணவின் மூலம் தானே உறபத்தி செய்துகொண்டு தன்னுடைய இயக்கங்களைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள இயற்கை வகை செய்திருப்பதைப் போல மனதிற்கும் அப்படியொரு வாய்ப்பை இயற்கை அளித்திருக்கிறது.ஆனால் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன் பெறுவோர் வெகு சிலரே.மனம் தனக்குத் தேவையான எல்லாவற்றையும், ஊக்கக் காரணிகள் உட்பட, எண்ணங்கள் மூலம் தானே நிச்சியத்துக் கொண்டு அதன் படி செயலாற்ற உடலைத் தூண்டுவதால் எண்ணங்களில் ஊக்கக் காரணிகளின் பாதிப்பு ஏற்படுமாறு செய்ய சாதகமான சந்தர்ப்பங்களை உருவாகிக் கொள்ளவேண்டும் 

No comments:

Post a Comment