ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-4
ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். முதலாவது சமுதாயத்தில் விரிவடைந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு பக்கம் செல்வந்தர்கள் ,மறுபக்கம் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படும் ஏழை எளியவர்கள். இரு வர்க்கத்தினரும் தகுதியின்றி அனுபவிக்கும் வாய்ப்புக்களை மட்டுமே தேடுகிறார்கள். இந்த எண்ணம் ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருதும் போக்கிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. வசதி மிக்கவர்கள்நேர்மையான வழியில் அவரவர் தகுதிக்கு ஏற்ப செல்வத்தைப் பெறவில்லை .வறியவர்களும் தகுதியை வளர்த்துக் கொண்டு முயற்சி மேற்கொள்ளாமல் ,விரும்பியது தானாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நினைத்தது நினைத்தது போல நடக்காததால் ,அவர்களுடைய வறுமைக்கும் இயலாமைக்கும் செல்வந்தர்கள் தான் காரணம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாட்டில் தோன்றும் இனச் சண்டை., சாதிச் சண்டை , மதச் சண்டை எல்லாவற்றியிருக்கும் அடிப்படை மக்களிடையே மிகுந்துவரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் .இது நிலைப்பட்டு வளரும் போது ஒருவர் மற்றவரைப் எதிரியாகக் கருத்துவதோடு அவர்களை அழிக்கவும் நினைத்து ச் செயல்படுகிறார்கள் ..
இது மக்களுக்குள் நடக்கும்
சண்டை என்றும் ,இதற்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று நினைப்பதும் ஒரு அரசாங்கம் செய்யும்
தவறாகும் .நாட்டின் நலத்தில் அக்கறையுள்ள ஒரு அரசாங்கம் மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு
ஒரு எல்லைமீறி வளரும் போக்கைத் தொடக்க நிலையிலேயே தடுத்திருக்க வேண்டும் . ஆனால் அரசாங்கத்தின்
துணையோடு அரசியல்வாதிகள் மக்கள் சண்டையில் ஆதாயம் தேடும் போக்கால் இந்தப் பிரச்சனைக்கு
விடியல் இன்றி சமுதாயத்தில் நிரந்தரமாகி வருகின்றது .ஆட்சி மாற்றத்தால் புதியவர்கள்
வரும்போது அவர்களும் முன்னவர்களைப் போல வசதியையும் வாய்ப்பையும் அடுத்த சில நாடகளுக்குள்
யே பெற்றுவிடவேண்டும் என்று அரசின் வருவாயை அதிகரித்து நிர்வாகத்தின் மூலம் ஆதாயம் தேடுகிறார்கள் .இது பொருளாதார ஏற்றத்தாழ்வை
மிகைப்படுத்திவிடுகின்றது
No comments:
Post a Comment