விளை பொருட்கள் என்பது வற்றாத ஆற்றல்
மூலம் ..சூரிய ஒளியும் பூமியில் நீரும் இருக்கும்
வரை இதைப் புதுப்பித்துக்கொள்ள முடியும் .தொல்பொருள் எச்சம் போல அருகிக் கொண்டே வந்து
ஒரு காலகட்டத்தில் இல்லாமற் போவதில்லை .விளை பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யவேண்டும்
.மக்களின் வாங்கும் சக்தியை வளர்த்து வைத்திருந்தால் ,இந்த விளை பொருட்கள் முழுவதும்
விற்பனையாகிவிடும் ..அது அடுத்து கூடுதல் விளை பொருட்களை உற்பத்தி செய்யும் எண்ணத்தைத்
தூண்டிவிடும் .விற்பனையாகாமல் உற்பத்தி செய்த விலைக்கு கூட விற்கமுடியாமல் விளைபொருட்களை குப்பையில் கொட்டுவது விவசாயிகளுக்கு
மட்டும் நஷ்டமில்லை ,அது நாட்டிற்கும் நஷ்டம் .இந்த இழப்பைத் தவிர்க்க அரசாங்கம் உரிய
நடவடிக்கலைகளை மேற்கொள்ள வேண்டும். .சம்பளத்தை உயர்த்தி மக்களின் வாங்கும் சக்தியை
உயர்த்த முயற்சி எடுக்காத ஆட்சியாளர்கள் விற்பனையாகாத விளைபொருட்களை கெட்டுப் போகாத
உணவுப்பண்டங்களாக மாற்றும் பயிற்சியை அளிக்க வேண்டும் .காய்கறிகளை வற்றல் வரளி யாகவும்
,ஜாம் ஜாஸ்,சிப்ஸ்,சூஸ் ஆகவும் மாற்றலாம். சேமிக்கப்படும் உணவு தானியங்கள் திறந்த வெளியில்
கிடந்து மழையில் நனைந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு
உண்டு .வரி வருவாயை உயர்த்தவும் ,வசூலிப்பதில் ஆர்வமும் காட்டும் ஆட்சியாளர்கள் இதற்கு
முன்னுரிமை கொடுத்து அக்கறை கொள்ளவேண்டும்.
நூற்றுக்கணக்கான கோடிகளில் சிலைகளை
ஏற்படுத்து வதற்குப் பதிலாக ,தானியங்களின் சேமிப்புக் கிடங்குகள் , உலகத்தரமான கல்விக்கூடங்கள்
, பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் , பொதுமக்களுக்கான பொதுவிடங்களின் நவீன கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு,
வேலையற்றோருக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றை உருவாக்கவேண்டும் . இதில் அக்கறை செலுத்தாத
எந்த அரசும் சிறந்த அரசாக இருக்கமுடியாது .
No comments:
Post a Comment