நம்முடைய ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் அரசாங்கத்தின் செலவில் வெளிநாடுகளுக்கு அரசியல் காரணமாக ச் செல்கின்றார்கள். அப்படிச் செல்லும் போது அந்த நாட்டில் தொழில் வளர்ச்சியை , கட்டமைப்பை, நிர்வாகத்தை , ஏற்றுமதி-இறக்குமதியை ஆராய்ந்தறிந்து வளர்ச்சிக்கு உகந்த நிச்சியமான மாற்றங்களை நம் நாட்டிலும் கொண்டுவரலாம். அதைச் செய்யாமல் ,மறை வொழுக்கத்தால் ஈட்டிய பொருளை அங்கு வங்கிகளில் சேமிக்கவும் , நட்பு ரீதியாக உரையாடிவிட்டு எந்தப் பலனுமின்றி நாடு திரும்புவதும் நாட்டின் வளர்ச்சிக்குப் பயநாதருவதில்லை. வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஏற்றுமதி யை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏற்றுமதி குறைவாக இருக்கின்றது என்றால் உற்பத்திப்பொருட்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்கலாம் .புதுமையை உட்புகு த்தி தரத்தை மேம்படுத்தும் போது ஏற்றுமதி பெருகக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது ,நாட்டு மக்களின் திறமை யையும் மனித வளத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தும் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு இருக்கவேண்டும் .வெளிநாட்டினர் நம்முடைய உற்பத்திப் பொருட்களை விட கனிம வளத்தால் கிடைக்கும் மூலப்பொருட் களையே அதிகம் இறக்குமதி செய்ய விரும்புகின்றனர்.இதை பண்டுவப்படுத்தி உற்பத்திப் பொருட்களாக்கி பல மடங்கு இலாபத்துடன் நம்மிடமே விற்றுவிடு கின்றனர்.நாம் மிக்க குறைந்த விலைக்கு உலோகத் தாதுக்களை விற்று ,மிக அதிக விலை கொடுத்து இராணுவத் தளவாடங்கள், தொழில் நுட்பச் சாதனங்களை வாங்குகின்றோம். இந்தச் சாதனையை அவர்கள் நம்முடைய திறமையான இந்தியர்களுக்கு வேலை கொடுத்து சாதிக்கிறார்கள். மூலப் பொருட்கள், திறமை மற்றும் மனித வளம் ,உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை இலாபத்திற்கு உறுதிமொழி எல்லாவற்றையும் கொடுத்து இழப்பை ஏற்றுக் கொள்கின்றோம் . சிங்கப்பூர் ஒரு சின்ன நாடுதான். அங்கு கட்டமைப்பு ,நிர்வாகம் ,சட்டம் ஒழுங்கு எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கின்றது. கனிம வளமே இல்லாத சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் வியக்கத்த வகையில் முன்னேறும் போது எல்லா வளமும் குறைவறப் பெற்றிருக்கும் இந்தியா ஏன் முன்னேறவில்லை.. மக்கள் சிந்திக்கிறார்கள் ஆனால் செயல்படுத்த முடியவில்லை. அரசியவாதிகள் சிந்திக்கவேயில்லை .
No comments:
Post a Comment