ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-3
ஏமாறுவதற்குத் திறமையோ திறமையின்மையோ தேவையில்லை . சமுதாயம் விரும்பியதைப் போல நல்லதை மட்டும் கற்றுக்கொண்டு தீயதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் வாழும் போது ஒருவர் எவ்வளவு தனித் திறமைகளைப் பெற்றிருந்தாலும் ஏமாந்து போய்விடும் வாய்ப்புள்ளவராகவே இருக்கின்றார். இதைச் சமுதாயத்தின் பலவீனமாகக் கருதி வேறு சிலர் சுயநலம் காரணமாக மக்களை ஏமாற்றத் துணிவு கொள்கின்றார்கள் . தீயத்தைத் தீயது என முன்னறிந்து தவிர்த்துக்கொள்ளவும் தடுத்து நிறுத்தவும் சமுதாயம் முன்வரவேண்டும் .தவிர்த்துக் கொள்வது என்பது தன் விருப்பச் செயல் ,அதைப் பிறர் குறுக்கீடுயின்றி சுய விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றிக்கொள்ளமுடியும். ஆனால் தடுப்பது என்பது எதிர் வினைச் செயல் .அதை எதிர்க்கும் போது அதனால் விளையும் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கவேண்டும். களவறியாத மனிதர்களால் இதைச் செய்யமுடிவதில்லை எதிர் வினைச் செயல்களைச் தனி மனிதர்கள் மேற்கொள்வதை விட சமுதாயத்திற்கான ஒரு பொது அமைப்பே மேற்கொள்ளவேண்டும் ,உண்மையில் அதற்காக உருவாக்கப்பட்டதே அரசாங்கம். ஒரு நாட்டில் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றால் அந்நாட்டின் அரசாங்கம் பலவீனமாகி மக்கள் நலத்தில் அக்கறை கொள்ளாத அமைப்பாக மாறிவருகின்றது என்று அர்த்தம்மக்கள் மக்களை ஏமாற்றுவது பெரும்பாலும் மறைவொழுக்கமாக வளர்ந்துவருகின்றது .இதன் வளர்ச்சி இதில் பெரும்பாலான மக்கள் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்ற உண்மையைத் தெரிவிக்கின்றது மக்களும் ,அரசும் மறைவொழுக்கத்தால் கிடைக்கும் சுயலாபங்களைக் கருத்திற்கொண்டு அதைப் புதுமைப்படுத்திக் கொண்டே வருகின்றார்கள்
உண்மையில் ஏமாறுவதற்குத்
திறமை தேவையில்லை ஏமாற்றுவதற்குத்தான் தனித் திறமை தேவை. இது ஒருவருடைய சுயவிருப்பமின்றி
, தனித்த முயற்சியின்றி மேம்படுவதில்லை. ..இதை வளர்க்க எண்ணத்தில் ஒரு கரு உருவாகி
உருப்பெருக்கம் அடைந்திருக்கவேண்டும் .இந்த எண்ணம் அடிப்படையான காரணமின்றி ஒருவரிடம்
தஞ்சமடைவதில்லை .இந்தக் காரணங்கள் ஒன்றும் பெரிய இரகசியமில்லை, எல்லோராலும் அறியப்
பட்டவைகளே.. இவர்கள் உழைத்துப் பொருள் சேர்த்து வாழ்க்கையை அனுபவிக்கும் மக்களைப் பார்த்துப்
பொறாமைப்பட்டு ,தானும் அவர்களைப் போல வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான பொருள் ஈட்டும்
வழி தெரியாமல் மறைவொழுக்கத்தை மறைவாகப் பின்பற்றும் பழக்கத்தால் வழி தவறிச் செல்கின்றார்கள்.
சமுதாயத்தில்
ஒவ்வொருவரும் உழைத்துப் பொருள் ஈட்டும் வாய்ப்பை ஜனநாயக அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்
.அப்படித் தவறும் போது அரசாங்கமும் இந்தக் குற்றத்திற்கு ஒரு பொறுப்பாளியாகின்றது
No comments:
Post a Comment