வயதுக்கு உட்பட்ட மக்கள் எல்லோருக்கும் வேலை. நல்ல சம்பளம் இருந்தால் அவர்களுடைய வாங்கும் சக்தி அதிகம் இருக்கும்.விற்பனை அதிகமாக அதிக மாக உற்பத்தி பெருகும் .உற்பத்தி பெருகப் பெருக நாட்டின் பொருளாதாரம் மேம்படும் ..சம்பளம் அதிகரிக்க வரியும் அதிகரித்தால் ,வாங்கும் சக்தி மட்டுப் படுத்தப்பட்டு விடுகின்றது .வரி வருவாயை சம்பளத்தால் மட்டுமே அதிகரிக்கும் போக்கை அரசாங்கம் கைவிடாத வரை நிலையான ,நிஜமான பொருளாதார முன்னேற்றம் கைவசப்படுவதில்லை ..கனிம வளத்தைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். விவசாயத்தின் மூலம் விளை பொருட்களை அதிகரிக்கவேண்டும். பொருள் உற்பத்தியில் புதுமைகளை உட்புகுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பையும் வேலையை யும் கொடுக்கும் போது இது சாத்தியமாகின்றது. நாடு அந்நாட்டிலுள்ள அனைவராலும் முன்னேறவேண்டும் ஒரு சிலர் மட்டும் வேலை செய்ய வேறு சிலர் வாய்ப்பின்றித் தடுமாற அதனால் ஏற்படும் வேறுபாடு நாட்டுக்காக அவர்கள் அளிக்கும் பங்களிப்பை வேறுபடுத்தி விடுகின்றது. ஒரு பொருள் அது ஒருநாடாக இருந்தாலும் எல்லோருக்கும் சமஉரிமையுள்ளது என்ற நம்பிக்கையை வளர்க்க வளர்க்க அந்த நாட்டின் முன்னேற்றம் ஆட்சியாளர் களின் முயற்சியின்றியே வெகுஇயல்பாக ஏற்படுகின்றது. அப்படியொரு நிலையை ஏற்படுத்த ஆட்சியாளர்களும் , அதிகாரிகளும் , பொது மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மக்களின் திறமை அதிகரிக்க கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்துவதை விட வெளிநாட்டு கல்விக்கூடங்களை இந்தியாவில் நிறுவ அனுமதிக்கலாம் . இதனால் பல திறமையானவர்கள் வருவார்கள், இவர்கள் நாட்டுக்காக மேலும் பல திறமையானவர்களை உருவாக்குவார்கள் .வெளிநாட்டு மாணவர்கள் கூட இங்கு படிக்க விரும்ம்பும் சூழல் கூட ஏற்படலாம்
No comments:
Post a Comment