கார்ட்டூன்
சுதந்திர தினத்திற்கு முதல் நாள் வகுப்பறையில் ஆசிரியர் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த தியாகிகளைப் பற்றியும், அப்போது அந்நிய நாட்டுப் பொருட்களை மறுத்து தீயிலிட்டுப் பொசுக்கியதைப் பற்றியும் நினைவு கூர்ந்து உணர்ச்சி வயப்பட்டு பேசினார்
வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்
ஒரு மாணவன் : பல்பொருள் அங்காடிகளில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு இப்போ அனுமதி வழங்கி இருக்காமே .இது நம்ம ஆசிரியர் சொன்ன கருத்துக்கு முரண்பட்டது போல இருக்கே .
மற்றொரு மாணவன் : சுதந்திரத்திற்கு முன்னர் " Be Indian ,buy Indian , இப்போ காலம் மாறிப் போச்சுடா ,To be Indian ,buy other than Indian , அரசியல்ல இதெல்லாம் சகஜம்டா மச்சி.அப்போ இந்தியத் தலைவர்களுக்கு ஏற்ற மக்கள் இல்லை இப்போ இந்திய மக்களுக்கு ஏற்ற தலைவர்கள் இல்லை.காலத்தின் கோலத்திற்கு எல்லையே இல்லை.“
No comments:
Post a Comment