மறைந்து போகும் மனிதநேயம்
சுட்டெரிக்கும் வேனிற் கால வெயில்
சொட்டுத் தண்ணீர் குடிக்க இல்லை
சுருண்டு விழுந்தாள் கிழவி நடுவீதியிலே
சுற்றியிருந்தோர் யாவரும் தத்தம் வழியிலே
நெடுஞ்சாலையில் விரைந்து ஓடிய ஸ்கூட்டர்
அதிகாலையில் மரத்தில் மோதி ஓய்ந்துபோது
ஓட்டி வந்த இருவரும் உயிருக்குப் போராட
ஒட்டிச் சென்ற எவரும் உதவிக்கு வரலையே
கண்ணில்லாத குருடன் சாலையைக் கடக்க
காலையிலிருந்தே தடுமாறித் தவித்து நின்றான்
மாலைப் பொழுதாகியும் மக்களில் யாரும்
மனம்விரும்பி உபகாரம் செய்ய எண்ணலையே
மாற்றுத் திறனாளிகள் வயதான முதியவர்கள்
மற்றும் வயிற்றில் சிசுவோடு வரும் தாய்மார்கள்
நின்றே பேருந்தில் நெடுந்தூரம் பயணித்தாலும்
இடம் தந்து உயர்ந்தவர் ஒருவருமிலையே
இருப்பவனுக்கு இல்லாதவன் புது உறவானான்
இல்லாதவனுக்கு இருப்பவன் பொதுப் பகையானான்
செயற்கையில் மனிதன் இயற்றிய வழிமுறைகள்
இயற்கையில் எங்கும் இல்லாத நெறிமுறைகள்
எனக்கு சிறு துன்பம் என்றால் கூட
எல்லோரும் ஓடிவந்து உதவ வேண்டும்
அடுத்தவன் துயரப்பட்டு துவண்டாலும்
அந்த நேயம் மட்டும் எனக்கில்லை.
இங்கே இல்லாதது அங்கேயும் இல்லை
அங்கே இல்லாதது இங்கேயும் இல்லை
மறந்து போன மனித நேயம்
மறைந்து போக தூரமில்லை
Wow! Sir, brilliant poem! Especially the last three lines are heart piercing! So True... humanity is in crisis!
ReplyDelete