Tuesday, September 18, 2012

Eluthatha kaditham


எழுதாத கடிதம் தோலிருக்க சுளை முழுங்கி -இந்திய வங்கிகள் ஒரு சமயம் நண்பரொருவர் காரைக்குடியிலிருந்து திடீரென்று சென்னைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.டாக்சியில் செல்லத் தீர்மானித்து விசாரித்த போது Rs.5000 + டிரைவர் பேட்டா கேட்டனர்.அதிகம் என்று நினைத்தாரோ என்னவோ தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தமிழக அரசு விரைவு வண்டியில் புறப்பட்டுச் சென்றார். அன்றைக்கு அந்த வண்டியில் சென்னை வரை நண்பரும் இன்னும் ஓரிருவரும் மட்டுமே சென்றனர் .அவருக்குச் செலவு Rs.330 மட்டுமே ஆனது.சிலர் மட்டுமே பயணித்தாலும் நடத்துனர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் கேட்கவில்லை.இது பொதுத் துறை,கூட்டுறவுத் துறைகளினால் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய பயன்.ஆனால் இன்றைக்கு கூடுதல் நிர்வாகச் செலவு, அதிக ஊதியம் ,தேவையில்லாத செலவினங்கள்,உழியர்களுக்கு கூடுதல் அனுகூலம் போன்றவற்றால் பல பொதுத் துறைகளின் மக்கள் சேவைகள் மங்கி வருகின்றன . வங்கிகளும் கூட மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பொது அமைப்புத்தான்.வங்கிகளுக்கு மக்களே மூலதனம்.வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மக்களிடம் தனி நபர் சேவை போல அதிகக் கட்டணத்தை வசூலித்து விடுகின்றனர். பொது மக்களின் பணத்தை விதிமுறை என்று சொல்லி எடுத்துக் கொண்டு லாபக் கணக்கு காட்டுவது உண்மையிலேயே வளர்ச்சியாகாது .ஒன்றுமில்லாமல் பணம் கைமாறுவது வளர்ச்சியில்லை.சேமிப்புக் கணக்கு என்பது எல்லோரும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதாகும் பணத்தி போடுவதும் எடுப்பதுமாக இருப்பதால் வங்கிகள் அதற்கு மிகக் குறைந்த வட்டியே கொடுக்கிறன.இப்பொழுது கணக்கில் குறைந்த அளவு இருப்புத் தொகை ரூபாய் 1000 -.5000 வரை என்று அவர்களுக்கு அனுகூலமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.இச் சிறுமம் கணக்கில் இல்லாவிட்டால் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 112.50 முதல் 140.75 வரை அவர்களாகவே கணக்கிலிருந்து கழித்துவிடுகின்றார்கள்.பதிவுப் புத்தகம் இல்லாததால் இருப்பை ஒவ்வொரு முறையும் சரியாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. மறந்துவிட்டு மாதக் கணக்கில் இருந்துவிட்டால் சில சமயம் இருப்பு நெகடிவ் ஆகக் கூட இருக்கும்.இப்படிப் பிடித்தம் செய்யப்போகிறோம் என்று கூட நமக்குத் தெரிவிக்க மாட்டார்களாம்.எல்லாமே வாடிக்கையாளர்களின் பொறுப்பு என்றால் வங்கிக்கு என்ன பொறுப்பு.போதும்டா சாமி சேமித்தது என்று கணக்கை முடித்துக் கொள்ளக் கேட்டால் அம்மாதத்திற்கு கழிக்க வேண்டியதையும் கழித்து,கணக்கை முடிப்பதற்காக என ஓர் தொகையையும் எடுத்துக் கொண்டு விடுகின்றார்கள். கணக்கு ஓப்பனிங்குக்கு free ஆனால் குலோசிங்குக்கு charge . ஒரு பொதுத் துறை செலவுகளைப் பகிர்வு செய்து தனி நபரிடம் வசூலிக்க வேண்டுமே ஒழிய இப்படி ஒட்டு மொத்தமாக த் திணிக்கக் கூடாது.சேமிப்புக் கணக்கிற்கு குறைந்த பட்ச இருப்பு 'O' என்றுதான் இருக்க வேண்டும் பல வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க இது போன்ற சலுகைகளை அளிக்கின்றார்கள்.தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சேமிப்புக் கணக்கிலிருந்து கழிப்பது என்பது முறையல்ல. சொல்லப்போனால் ஒரு சேமிப்புக் கணக்கிற்கு அவர்கள் கொடுக்கும் மொத்த வட்டியை விட இந்த மாதப் பிடித்தம் மிக அதிகமாகும். அது நிர்வாகத்தின் சட்டமாக இருக்கலாம் ஆனால் மக்களின் தர்மமில்லை.வேண்டுமானால் உச்ச வரம்பாக ஒரு சிறு தொகையை பிடித்தம் செய்யலாம்.வங்கிகள் மக்கள் சேவை செய்யத்தானே .

No comments:

Post a Comment