Monday, August 12, 2013

Arika Iyarpiyal

ஒரு செம்புக் கம்பியின் நீளம் 0.1 % நீட்டப்பட்டு அதிகரிக்கப்பட்டால் ,அதன் மின்தடையில் ஏற்படும் மாற்ற‌த்தின் சதவீதம் எவ்வளவு ?
மின்தடை என்பது ஒரு கடத்தி மின்னழுத்தத்தால் ஏற்படும் எலெக்ட்ரான்களின் பாய்விற்கு ஊடகம் கொடுக்கும் தடை எனலாம். ஒரு மின் கடத்தியின் நீளம் அதிகரிக்க,எலெக்ட்ரான்கள் பாய்வின் போது மோதலை உண்டாக்கிக் வேகத் தடையைப் பெறும் வாய்ப்பு அதிகரிப்பதால் மின்தடை அதிகரிக்கின்றது .
ஒரு மின்தடையின் குறுக்குப் பரப்பு அதிகரிக்க எலெக்ட்ரான்கள் பாய்வின் போது மோதலை உண்டாக்கிக் கொள்ளும் வாய்ப்புக் குறைவு என்பதால் மின் தடை குறைகின்றது.
α l, R α 1/A , R = ρ [l/A].
இதில் ρ  என்பது மின்தடைப் பொருளைப் பற்றிய ஒரு மாறிலி .இதை மின் தடைத் திறன்(resistivity) என்பர். பொருள் அடர்த்தி d எனில் ,l நீளமுள்ள கம்பியின் நிறையை  Ald  = m எனக் குறிப்பிடலாம் . A = m /ld  அல்லது  R =  ρdl2/m இதை தொகையாக்கம் செய்ய 

dR =    ρdl2/m 2 dl/l . dR/R x 100 % = 2 [dl/l]x 100 %, drR/R x 100 = 2 x 0.1 = 0.2 %   எனவே செம்புக் கம்பியின் மின் தடை 0.2 % அதிகரிக்கும் எனலாம் 

No comments:

Post a Comment