Creative
thoughts
குற்றம் நடந்துவிட்டால் யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பது இருக்கட்டும் .குற்றத்தைப் பதிவு செய்வதற்கே பல தடைகள் இருக்கின்றபோது நாட்டில் குற்றங்கள் பெருகாமல் எப்படி இருக்கும் ?
குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வழங்குவதை விட குற்றவாளி கொள்ளையிட்ட பொருளிலிருந்து பங்கு பெறுவதிலேயே காவலர்களும் அரசியல்வாதிகளும் அதிக அக்கறை காட்டி வருகின்றார்கள்.
நான் இந்தியாவில் பிறந்ததைப் பெருமையாகக் கருதுகின்றேன். ஆனால் இங்கே வாழும் போது அந்தப் பெருமையை இழந்துவிட்டேன் என்று பலருடைய எண்ணங்களில் கேளாஒலியில் ஓர் அவல ஓசை ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது.
கேளாஒலி என்பதால் கேட்கவில்லை என்பதற்காக அவலத்தை மறுத்து விடமுடியாது .
நான் மீண்டும் இந்தியாவிலேயே பிறக்க விரும்புகின்றேன் என்று பெரும்பாலானோர் மனப்பூர்வமாகச் சொன்னால் அதுதான் இந்தியா உண்மையிலேயே ஒரு சிறந்த நாடு என்று ஒப்புக் கொள்ளத் தகுந்த சான்றாகும்.
மக்களை மக்களே ஏமாற்றிப் பிழைக்கத் துணிந்து வருகின்றார்கள் என்றால் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு பலவீனமாகி வருகின்றது என்று பொருள்.
இந்தியர்கள் செய்த தவறுகளுள் ஒன்று கடவுளை வெளியில் தேடுமாறு மக்களைப் பழக்கப் படுதித்தியதுதான்.கடவுளைத் தேடித் தேடி அப்படியொன்றும் வெளியில் இல்லையென உறுதி செய்துகொண்டவர்கள் மெல்லமெல்ல குற்றங்களைச் செய்ய துணிவுக்கொள்கின்றார்கள்.அதனால் ஒரு காலத்தில் சமுதாயத்திற்கு பாதுகாவலாயிருந்த ஆன்மிகம் இன்றைக்குப் பயனின்றிப் போய் குற்றங்கள் பெருகிவருகின்றன.
மனம் இருப்பது மனிதனுக்குள்ளே என்றாலும் மனவெளி பிரபஞ்சத்தை விடவும் பரந்தது அதன் நிலைகட்ட வெளியில் (Phase space)
எண்ணற்ற எண்ணங்களைப் பதிவுசெய்து நிரப்ப முடியும்.அதில் தேவையான எண்ணங்களை விட தேவையில்லாத எண்ணங்களே அதிகம்.மனம் மனிதனின் செயல் அலுவலகமாக இல்லாது எண்ணங்களின் குப்பைத் தொட்டியாக மாறி வருவதால் மனிதர்களின் தரம் குன்றி வருகின்றது
No comments:
Post a Comment