Saturday, August 3, 2013

eluthaatha kaditham

எழுதாத கடிதம் 
   நேற்று முன் தினம் அரசியல் வாதிகள் ஒரு போராட்டம் நடத்தினார்கள் .குரல் இல்லாவிட்டால் மக்கள் எங்கே மறந்து போய் விடுவார்களோ என்ற உந்துதல் தூண்டிய போராட்டம் போல இருந்தது .
அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராக அமர்த்த வேண்டும் என்று கோஷம் போட்டார்கள் .அர்ச்சகராவதற்கு ஆன்மிக உணர்வுகள் இருந்தால் போதுமானது என்றாலும் வேத சாஸ்திரங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்பது காலங் காலமாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு .

அர்ச்சகர் தொழில் இன்றையச் சூழலில் ஒரு சிறிய குடும்பத்திற்குக் கூட வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இருப்பதில்லை.பல கோயில்கள் இருண்டும் ,வறண்டும் போய்க்கொண்டிருக்கின்றன என்றால் அங்கு அர்ச்சகர் நெடுங் காலமாக இல்லை என்பதே காரணமாக இருக்கின்றது . அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிடலாம் என்பது தான் முக்கியமே ஒழிய எல்லோரும் அர்ச்சகராக வரவேண்டும் என்று போராடுவது புனிதமாகாது 
அனைத்து சாதியினரும் அமைச்சர்களாக அமரவேண்டும் ,என்று போராடுங்கள் ,அது நியாயம்.வளமான வாழ்க்கைக்கு வழி தேடிக் கொடுத்த புண்ணியம் கிடைக்கும். அவர்களுக்காக உங்கள் இடத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத போது இது போன்ற சிந்தனைகள் வருவதில்லை. 
தனித் திறமை தேவையில்லை என்று கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதவிகள் என்றால் அதில் எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் படி செய்யவேண்டும் .தனித் திறமை தேவையெனில் அது திறமையை வளர்த்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே .இதில் சமரசம் செய்து கொள்வது என்பது நம்மை நாமே மேலும் முட்டாளாக்கிக் கொள்வதற்கு ஒப்பாகும் ..
அரசியல் வாதிகள் இன்னும் இன்னும் மக்களை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றார்கள் அவர்கள் மாறவே மாற்றார்கள் என்றால் மக்களும் அப்படியே இருப்பது தூரதிர்ஷ்டவசமானது


No comments:

Post a Comment