Saturday, August 24, 2013

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா 
அக்குயிலா(Aquila) 
பேரண்டத்தில் நடு வரைக் கோட்டுப் பகுதியில் உள்ள இவ் வட்டாரத்தில் 70 விண்மீன்களை இனமறிந்துள்ளனர்.இது கழுகு போன்று தோற்றம் தருவதாகக் கூறுகின்றாரகள்.
இவ் வட்டாரத்தின் மிகப் பிரகாசமான விண்மீன் ல்டையர் (Altair) என்ற
ஆல்பா அக்குயிலியே.விண்ணில் தெரியும் பிரகாசமானவற்றுள் 12 வதாக உள்ளது.16 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 0.8 ஆக உள்ளது .இது கழுகின் கழுத்திற்கு அருகாமையில் ஒரு முக்கோணத்தின் உச்சிப் புள்ளிக்கு நெருக்கமாக அமைந்துள்ளது.இந்த முக்கோணம் சைக்னசின்(Cygnus) டெனெப்((Deneb), லைரா(Lyra)வின் வேகா(Vega) இவற்றால் முழுமையடைந்துள்ளது ல்டையர் என்றால் அரேபிய மொழியில் பறக்கும் கழுகு என்று பொருள்.

அல்டையர் உயரளவு தனித்த தன்னியக்கத்தைப் பெற்றுள்ளது.இதனால் ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்கும் ஒரு டிகிரி கோண விலக்கம் பெறுமாறு இடம்பெயர்ந்து காணப்படுகின்றது.இது மிக விரைந்து தற்சூழலும் விண்மீன்களுள் ஒன்று.இதன் நடுவரைக் கோட்டுப் பகுதியில் தற்சூழலும் வேகம் 242 கிமீ /வி .நமது சூரியனுக்கோ இதன் மதிப்பு 2 கிமீ /வி என்றால் இதன் தற்சுழற்சியின் தன்மையை ஒருவாறு ஊகிக்கலாம் .இத் தற்சுழற்சி இயக்கத்தினால் அல்டையர் தன்னைத் தானே 9 மணி நேரத்திற்கு ஒருமுறை சுற்றிக் கொள்கிறது.விரைவான தற்சுழற்சி அதன் தட்டைத் தனத்தை அதிகமாக்கியுள்ளது.அதாவது நடுவரைக் கோட்டுப் பகுதி உப்பியும் துருவங்கள் அமுங்கியும் உள்ளன.இதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல 1.7 மடங்கும் ஒளிர்திறன் சூரியனைப் போல 11 மடங்கும் உள்ளன .இந்த விண்மீனை நாம் திருவோணம் எனப் பெயரிட்டுள்ளோம்.இதன் நிறமாலை வரிகளின் பெயர்ச்சி இது நம்மை நோக்கி 26 கிமீ /வி என்ற வேகத்தில் வருவதாகத் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment