சுதந்திரம் என்பது எப்போதும் தன் விருப்பம் போலச் செயல்படுவதற்குச் சமுதாயம் தந்த உரிமை என எடுத்துக் கொள்ளக்கூடாது .தான் பாதிக்கப்ப்படுமாறு பிறர் எதைச் செய்யக் கூடாது என்று நாம் நினைக்கின்றோமோ அதை நாமும் செய்யக்கூடாது என்று நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான சுதந்திரம் .
தீய செயல்களைச் செய்யாதிருப்பதும் ,நல்ல செயல்களை எண்ணி பொறுப்போடு அதைச் செய்து முடிப்பதும் சுதந்திரம் .
சேவலை விட கோழி அதிகமாக சத்தம் எழுப்பினால் ,அந்நாடு உள்நாட்டுச் சண்டையால் சுய அழிவைத் தேடி விரைந்து செல்லும் .பெண்ணியத்தைப் பற்றிப் பேசுபவர்கள் ஆண்களின் உளவியலைப் பற்றி நினைக்க மறந்து விடுகின்றார்கள் .
மனிதனின் சுதந்திரம் மற்றவர்களுக்குத் துன்பம் அளிக்காத வகையில் கட்டுப்படுத்தப் படவேண்டும்
சுதந்திரம் பெறுவதற்குப் புறவெளியில் ஒரு போராட்டம் போதும் .அது பெரிதல்ல .ஆனால் கிடைத்த சுதந்திரத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதும் வைத்திருப்பதும் தான் கஷ்டம் .அங்கே அகவெளியில் நடக்கும் போராட்டங்கள் கணக்கிலடங்கா .
சுதந்திரம் என்பது உண்மையில் ஓர் ஆயுதம் .சுதந்திரம் பெற்ற பின்பும் சமுதாயம் முன்னேற்றம் காணவில்லை யென்றால் அந்த ஆயுதத்தை எல்லோரும் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் என்று அர்த்தம் .
No comments:
Post a Comment