Mind
without fear
பெற்றோர்களின் அன்பில் திளைத்து ,ஆசிரியர்களின் அக்கறையில் அறிவை வளர்த்து நண்பர்களின் பழக்கத்தால் அனுபவங்களை த் தெரிந்து ,உணர்வுகள் மூலமாக அதையெல்லாம் அளவில்லாமல் மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் நம்பிக்கையை நம்பிக்கை க்கு உரியதாய் வளப்படுத்திக் கொண்ட இளைஞர்கள் பிறருக்குத் துணையாக பிறர் துணையின்றிச் சமுதாய வீதியில் நடை போடும்போது தடுமாற்றமடைகின்றார்கள் .
நீண்ட நாட்களாய் வளர்த்த நம்பிக்கை நொடிப்பொழுதில் வலுவிழந்து போகுமோ ?பிரச்சனைகளைச் சந்திப்பதற்கு முன்பு வீர வசனம் பேசிய நம்பிக்கை பிரச்சனைகளைச் சந்திக்கும் தருணத்தில் புறமுதுகு காட்டி தனியே ஆளைத் தவிக்கவிட்டு ஓடிவிடுமோ ? அப்படிப்பட்ட நம்பிக்கை போலியான ,பொய்யான நம்பிக்கையாக மட்டுமே இருக்கமுடியும் .
நம்பிக்கை உறுதியானதாக இருக்க வேண்டுமெனில், இக்கட்டான நேரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டுமெனில் கற்ற கல்வி முழுமையானதாக இருக்கவேண்டும் .அதாவது கல்வியை வாழ்க்கையின் போக்கில் பயன்படுத்திக் கொள்ளத்தக்கதாக இருக்கவேண்டும் .கல்வியை க் கற்றுக் கொள்ளும் அதே காலத்திலேயே அதைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையையும் பெறவேண்டும்.கற்ற கல்வியில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளத் தவறும் சூழ்நிலையில் அது வாழ்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை .இப் பாதிப்பு மீண்டும் மீண்டும் ஏற்பட்டு நிலை குலைந்து போகும் போது.உலகில் வாழத் தகுதியற்ற வன் என்ற மாயத் தோற்றம் மனதில் ஊசலாடுகின்றது.தவறான எண்ணத்தால் அதன் வீச்சு அதிகமாகும் போது தற்கொலை முடிவை சட்டென எடுத்து சட்டென நிறைவேற்றிக் கொண்டு விடுகின்றார்கள்.
தற்கொலை பிரச்சனைகளின் தீர்வே அல்ல .அது தீர்வு என்றால் எல்லோரும் தற்கொலை மூலம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு பெறமுடியும் ஆனால் காண முடியாது .
No comments:
Post a Comment