கார்ட்டூன்
வலை வேணுமா வலை .உறுதியான வலை .ஒரே வீச்சில் எல்லாம் சிக்கும். வலை வாங்கிங்க சாமி.
ஐயோவ் ,இது போலீஸ் ஸ்டேஷன் .இங்கே வலையெல்லாம் வாங்கமாட்டாங்க .மீனவர் குப்பம் போய் விய்யப்பா.
சும்மா பொய் சொல்லாதிங்க சாமி .போலீஸ் வலை வீச்சுன்னு தினம் தினம் பேப்பர்லயும் டி.வியிலயும் செய்தி வருதே.சல்லிசா போட்டுத் தாரேன் வாங்கிக்க சாமி .
தினம் தினம் அதிகரித்து வரும் கொலை,கொள்ளை ,கற்பழிப்பு,லஞ்சம் போன்ற குற்றங்கள். கண்டுபிடித்து கட்டுப்படுத்தியிருந்தால் அல்லது கட்டுப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் கொஞ்சமாவது இருந்தால் குற்றங்கள் இப்படிப் பெருக வாய்ப்பில்லை
.குற்றவாளிகளைப் பிடிக்காமல் தொடர்ந்து வலை வீசிக் கொண்டேயிருக்கின்றார்கள் .எவ்வளவு வலைதான் கைவசம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை .வலை ஓட்டையாயிருந்தால் சின்ன மீனும் தப்பிப் போய்விடும் .
No comments:
Post a Comment