சொன்னதும் சொல்லாததும்
அலெக்ஸாண்டர் பிlளமிங் 1881ல் ஸ்காட்லான்டில் பிறந்தார்.அலெக்ஸாண்டர் பிளமிங் 7 வயது சிறுவனாக இருக்கும்போது தந்தையாரை இழந்தார் .மேலும் அவருடைய தந்தையாரின் வயதான காலத்தில் இரண்டாம் மனைவிக்குப் பிறந்ததால் அவருடைய கல்வி யைத்
.தொடர்ந்து படிக்க முடியாமல் இளம் வயதில் கப்பல் கட்டுமானத் துறையில் ஒரு அதிகாரியாகப் பணியாற்றினார்.பின்னர் MBBS பட்டத்தை 1906 ல் முதல் தரத்துடன் பெற்றார்
மருந்துக் கலவையியல்,தாவரவியல்,உயிரியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார் .முதல் உலகப் பெரும் போரில் இராணுவப் பணி யாற்றினார்.போர்க்காலத்தில் பல படை வீரர்கள்
தொற்று நோய் நுண்மங்கள் பரவிய காயம் காரணமாக இறந்ததைக் கண்ணுற்றார்.அதுவே அவருடைய எண்ணத்தில் ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்புக்கு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஒரு தூண்டுகோலாக அமைத்தது எனலாம்.
எதிர் பாக்டீரியா புறப் பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.எதிர் நுண்மப் பொருட்கள்
உட்புகுந்த பாக்டீரியாக்களை கொல்வதை விட நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெரிதும் பாதிப்படையச் செய்கிறது என்பதைக் கண்டறிந்து தெரிவித்தவர் இவராவார்.
இவர் மருத்துவத் துறையில் பென்சிலின் கண்டுபிடிப்புக்காக நோபெல் பரிசு பெற்றார்.
ஒருவரால் சிந்திக்க முடியாத,கற்பனை செய்ய முடியாத ஒன்றை வேறொருவர் சில சமயங்களில் கண்டுபிடித்து விடுகின்றார்
என்று இவர் கூறுவதுண்டு.
ஒரு தனி நபரே ஒரு புலத்தில் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதுகின்றார்.அதன் விளக்கத்தையும்,விரிவையும் பின்னர் ஒரு குழு ஆராய்ந்து தெரிவிக்கின்றது என்றும் நம்முடைய
வாழ்க்கையில் நம்பமுடியாத விதத்தில் வாய்ப்புகள் தாக்கத்தைப் பெற்றுள்ளன.இளம் ஆய்வாளர்களுக்கு கூறுவது என்னவென்றால் அரிதாகவரும் வாய்ப்புக்களை அலட்சியப்படுத்தி விடாதீர்கள் என்பதுதான்
என்றும் கூறுவார் .
உண்மையில் வாய்ப்புக்களை நாம் பயன்படுதித்திக் கொள்ளும் விதத்தில்தான் நம்முடைய முன்னேற்றம் அமைகின்றது.வாய்ப்புக்களைச் சரியாக,சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள சரியான அறிவு வேண்டும்.சரியான அறிவில்லாதவர்களே.வாய்ப்புக்களைத் தவற விட்டுவிட்டு நல்வாய்ப்பு இல்லையென,அறியாமையை ஒப்புக்கொள்ளாமல் வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களை எள்ளி நகைப்பர்.
No comments:
Post a Comment