சிறு கதை
ஒரு ஜன்னல் வழியாக இரு இளைஞர்கள் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தார்கள் .ஒருவன் எப்போதும் கீழே ஓடும் சாக்கடையைப் பார்கிறான் .அருவெறுப்பு க் கொண்டு மூக்கை மூடிக்கொள்கிறான் ,பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான் .மற்றவன் மேலே விண்ணில் நீந்திச் செல்லும் சந்திரனையும் விண்மீன்களையும் பார்கிறான். ஒவ்வொருநாளும் பார்த்து அதன் தோற்றங்களில் ஏற்படும் மாற்றங்களை உற்றுக் கவனிக்கின்றான் .கண்களை இன்னும் அகல விரிக்கின்றான் .தொலை நோக்கியை வடிவமிக்கின்றான் .இடைத்தொலைவை கணக்கிடுகின்றான் .விண்வெளிப் பயணம் பற்றிய சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆராய்கின்றான் .வெறும் பார்வையால் ஏற்பட்ட ஆர்வம் அவனுக்கு அடுத்தடுத்து வேலைகளைக் கொடுத்து எப்போதும் செயல்படு நிலையில் இருக்கச் செய்கிறது .சாக்கடையைப் பார்த்தவன் தன் உணர்வுகளை மேலும் சுருக்கிக் கொள்கிறான் .அதனால் மூளையும் சிந்திக்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றது .உணர்வுகளை சுருக்கிக் கொள்ளும் போது மூளையை இழந்து விடக் கூடாது. சாக்கடையைப் பார்க்கலாம் ,பார்த்தபின் அதைச் சரிசெய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.ஜன்னல் வழியாக மலை முகட்டைப் பார்த்தாலும் ,ஆழ் கடலைப் பார்த்தாலும் எண்ணத்தின் தொடர்ச்சியில் என்ன செய்யலாம் என்பதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு எதிர்காலச் சாதனைக்கு ஒரு பிள்ளையார் சுழி போடவேண்டும் . வாழ்கையில் வெற்றி பெறப் போகின்றவனும் ,தோல்வியைத் தழுவப் போகின்றவனும் அவர்களுடைய பார்வையாலும் சிந்தனையாலும் வேறுபடுகின்றார்கள் .
No comments:
Post a Comment