சொன்னதும் சொல்லாததும்
ஜெர்
ட்ரூடு ஸ்டெயின்(Gertrude Stein) 1874 ல் அமெரிக்காவில் பிறந்து 1946 ல் பிரான்ஸில் இறந்தார் .இவர் அவர் காலத்தில் மிகச் சிறந்த
ஓவியர் ,நாவலாசிரியர்.கவிதை,நாடகங்கள் எழுதுபவர் இவருடைய எழுத்துக்கள்
இன்றைக்கும் மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கின்றன .
“ஒருவர் தன்னைத் தானே
காதலிப்பது எளிது.ஏனெனில் அதில் எந்தவொரு புறத் தடையுமில்லை”.
நாம் எதையாவது செய்து முன்னேற வேண்டும் என்று விரும்பினால் முதலில் நாம் நம்மையே காதலிக்கப் பழகிக் கொள்ளவேண்டும் .நம்மை நாமே காதலிக்காமல் நாம் திறமையை த் திறம்பட வெளிப்படுத்த முடியாது .காதல் என்பது வெறும் பாலுணர்வு சம்பந்தப் பட்ட விஷ்யத்த்தை மட்டுமே குறிக்கும் சொல்லில்லை.அது நீண்ட நெடுக்கைகுட்பட்ட பொருண்மைகளைக் கொண்ட ஒரு சொல்.விரும்பும் தன்மைகளை விரும்பி நேசித்தலும் காதலே.அத் தன்மை தன்னிடம் இருக்கும்போது தானைத்தானே நேசித்தல் இயல்பாகும். நேசிக்க நேசிக்க அத் தன்மை மிகுந்து சிறப்பாக வெளிப்பாட்டுத் தோன்ற வாய்ப்பும் அதிகரிக்கும்
“பொதுவாகச்
சொன்னால் எல்லாவற்றையும் செய்வதற்கு காட்டுவதைவிட.ஒவ்வொருவரும்
ஒன்றையும் செய்யாமல் இருக்க,அதிக ஆர்வத்துடன் இருக்கின்றார்கள்”
பலர் எல்லாவற்றிலும் தலையிடுவார்கள்,ஆனால் எதையும் சரியாக முடிக்கமாட்டார்கள்.இது கூடப் பரவாயில்லை.பலர் இன்றைக்கு சும்மா இருப்பதே சுகமென்று எதையாவது ஒன்றைக்கூட செய்வதற்கு ஆர்வப்படுவதில்லை.
“ஒவ்வொருவரும் எல்லா
நாட்களிலும் அவர்கள் தங்கள் மறதியால் இழக்கப்படுவதற்கு பல செய்திகளை அதிகமாகப்
பெறுகின்றார்கள்”
தேவையில்லாத செய்திகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்வதால் தேவையான செய்திகள் தேவையான போது நமக்கு நினைவிற்கு வருவதில்லை.வாழ்நாள் முழுக்க வாழ்வதற்கு எது தேவை,எது தேவையில்லை என்பதை வாழக்கையைத் தொடங்குவதற்கு முன்னரே தெரிந்து கொள்ள முடிந்தால் வாழக்கையின் பயனுறுதிறனை ஒருவர் வெகு எளிதாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment