Sunday, August 25, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் 
இந்தியா சுதந்திரத்திற்கு பின்பு சுதந்திரத்திற்கு முன்பிருந்ததை விட சுதந்திரமாக இருக்கிறதா, குறைந்த ட்ம் தே ளவு சுதந்திரமாவது இருக்கிறதா என்ற கேள்வி இன்றைக்கு எல்லோர் மனத்திலும் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது.அரசியல்வாதிகள் மக்களை மோசமாக மேலும் மோசமாக நடத்திக் கொண்டே செல்வதின் எதிரொலிப்பே இது போன்ற அந்தரங்கக் கேள்விகள் .அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களை இந்தியாவையே விலைக்கு வாங்கிய முதலாளிகள் போல நினைத்துக் கொள்வதால்,வாழும் மக்களை தொழிலாளிகளாகவும்,அடிமைகளாகவும் கருதுகின்றார்கள்.பாராளுமன்றத்திலும் சரி,சட்ட மன்றத்திலும் சரி தொண்டு செய்யும் தொழிலாளியாகச் சேர்ந்து முதலாளியாக மாறியிருக்கின்றார்கள். அதன் மூலம் பெரும்பாலானோர் மில்லியனார்களாகி இருக்கின்றார்கள்.பல தொழிற்சாலைகளுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் அதிபதியாகி இருக்கின்றார்கள்.ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிப் போடும் அளவிற்கு பணக்காரர்களாக இருக்கின்றார்கள்.சளிப் பிடித்தால் கூட இங்கிலாந்து,அமெரிக்கா என வெளிநாடு சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ளும் நாட்டுப் பற்று மிகுந்தவர்களும் இருக்கின்றார்கள். எல்லாவற்றையும் மக்கள் வரிப்பணத்திலேயே செய்து கொண்டு விடுவதால் திட்டப் பணிகளுக்கு பற்றாக்குறையை சுமத்திவிடுகின்றார்கள். இதனால் வரியை அதிகரிக்கும் கலையை கற்று மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். அடியாட்களின் ஆரவாரத்தால் அரசியல்வாதிகளின் பொய்யான வார்த்தைகளின் உண்மைத் தோற்றத்தை உணராது ஏமாந்து போகின்றார்கள் பாவம் இந்திய மக்கள்,அரசியல்வாதிகள் உண்மையிலேயே என்ன செய்கின்றார்கள் என்பதை இன்னும் அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். வரிப்பணம் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்குச் சொத்தாக மாறும் போது இந்தியா வளர்ச்சியின்றி மேலும் மேலும் றுமையடைகின்றது.


இந்தியா ஒரு காலத்தில் பல சுதந்திர நாடுகளாக இருந்தது .அந்நியர்களின் படையெடுப்பில் அந்த சுதந்திரம் பறிபோனது.அந்நியர்கள் மாறினார்கள் சுதந்திரம் வரவேயில்லை.மஹாத்மா காந்தியின் கீழ் ஒன்று கூடிப் போராடினோம்.சுதந்திரத்தை பல தலைமுறை தாண்டி மீட்டுப் பெற்றோம். ஆனால் சுதந்திர இந்தியாவில் பசிக் கொடுமை இருக்கிறது, பிணிக் கொடுமை இருக்கிறது,மதுக் கொடுமை இருக்கிறது,சாதிக் கொடுமை இருக்கிறது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி இருக்கிறது,மாசுக் காட்டுப்படின்மை அதிகரித்திருக்கின்றது,பண வீக்கம் அதிகரித்திருக்கின்றது,உணவுப் பொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கின்றது,கொலை,கொள்ளை அதிகரித்திருக்கின்றது, நீதியை நிலை நாட்டுவது கடினமாய் இருக்கிறது,ஊழல்,லஞ்சம் அளவின்றி அதிகரித்திருக்கின்றது,வேலையின்மையும் ,வேலை செய்யாமையும் அதிகரித்திருக்கின்றது.முதல் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்க வேண்டுமானால் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் அவசியம் என்பதை இந்திய மக்கள் எப்போது உணரப் போகின்றார்களோ? 

No comments:

Post a Comment