Thursday, August 29, 2013

Philosophy

ராஜ்ஜியம் எவ்வளவு பந்து விரிந்து இருக்கின்றதோ அந்த அளவிற்கு பாதுகாப்பும்,பரிபாலனமும் இருக்கவேண்டும் .தொழிலில் எவ்வளவு வளர்ச்சி இருக்கிறதோ அந்த அளவிற்கு அர்ப்பணிப்பும் ,கண்காணிப்பும் இருக்கவேண்டும்.குடும்பம் எந்த அளவிற்கு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உழைப்பும் வருவாயும் இருக்கவேண்டும் .அதுபோல வீட்டில் எந்த அளவிற்கு இடம் இருக்கின்றதோ அந்த அளவிற்கு பொருளும் வசதியும் இருக்கமுடியும் 
பிரபஞ்சம் எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதில் விண்மீன்கள் இருக்க முடியும் 
வயல் எந்த அளவிற்கு பரந்திருக்கின்றதோ  அந்த அளவிற்கு விளைச்சலும் உற்பத்தியும் இருக்கும்.
நல்லறிவு எந்த அளவிற்கு புத்தியில் இருக்கின்றதோ அந்த அளவிற்கு‌த்தான் மனிதனும் சமுதாயமும் நலம் பெற முடியும்.

வேகம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கின்றதோ அல்லது நேரம் எந்த அளவிற்கு கூடுதலாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு தூரம் கடக்க முடியும்.

No comments:

Post a Comment