Micro aspects
of developing inherent potentials
நாம் அன்றாடம் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் மூன்று வகைக்குள் அடக்கிவிடமுடியும்.நம்மால்
நேரடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய,நமக்கும்,பிறருக்கும் நாமே காரணமாயிருக்கும் பிரச்சனைகள்,நம்மால் நேரடியாகக்
கட்டுப்படுத்த முடியாத,நமக்குப் பிறர் காரணமாயிருக்கும் பிரச்சனைகள், நம்மால் எதுவும் செய்யமுடியாத,காரணம் தெரியாத பிரச்சனைகள்.
“கோபம் வந்து விட்டால் நான் என்ன செய்கின்றேன் என்பதே எனக்குத் தெரியாது” என்றும் ”இரவில் நெடுநேரம் தொலைக்காட்சி பார்த்த்து விட்டு படுப்பதால் காலையில் எழுந்திருக்க நேரமாகின்றது,அதனால் அலுவலகத்திற்கு தாமதமாகின்றது” என்றும் ”சாமான்களை எடுத்த இடத்தில் வைப்பதில்லை,அதனால் எப்போதும் தேவைப்படும் சாமான் உடனே கிடைப்பதில்லை” என்றும் ”வரும் கடிதங்களுக்கு உடனே பதில் எழுதுவதில்லை,கொஞ்சம் நாளாகிவிட்டால் மறந்து கூடப் போய்விடுவேன்” என்றும்,இப்படி நமக்கு நாமே காரணமாயிருக்கும் பிரச்சனைகளின் எண்ணிக்கைக்கு அளவேயில்லை.
எந்தச்
சூழ்நிலையிலும் எதிர் செயல் ஏதும் புரியாமல் தன்னைத்
தானே கட்டுப்படுத்திக் கொண்டு சுய கட்டுப்பாட்டுடன் செயல்படுபவர்களை நிறை மதி செயல்
வல்லவர்கள் (proactive) என்பர்.இவர்கள் முதலில் சூழ்நிலையைத் தெரிந்து கொண்டு பின்னர்
புரிந்து கொள்ள போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு செயல்படுவதால் பிரச்சனைகளைச் சரியாக
அறிந்து கொண்டு அவற்றைத் தொடக்க நிலையிலேயே தவிர்த்துக் கொண்டு விடுகின்றார்கள் .பிரச்சனைகளோடு
செயல்படுவது பாதி பயனுறு திறனை இழப்பதாகும். நிறை மதி செயல் வல்லவர்கள் பயனுறு திறனை இழக்க விரும்புவதில்லை.
மனம் எப்போதும் இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடும். தன்னிடம் இருப்பதை மறைத்து வைத்து விட்டு பிறரிடம் இருப்பதை அனுபவிக்க முயலும்.
பிறருடைய பிரச்சனைகளுக்கு நாம் காரணமாய் இருப்பதால்தான்,நம்முடைய பிரச்சனைகளுக்கும் பிறர் காரணமாக இருக்கின்றார்கள் என்பது நாம் ஏற்றுக்கொள்ளாத ஒரு பொய்யாகவே இருக்கட்டும் .ஆனால் அந்தப் பழக்கத்தின் வழக்கத்தினால் அதுவே பல சமயங்களில் நம்முடைய பிரச்சனைகளுக்கு நாமே காரணமாகிவிடக் காரணமாகிவிடுகின்றது.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதிர்செயல்
புரியத் தன்னைத் தயார் படுத்திக் கொள்பவர்களை வம்பர்கள் (reactive) என்பர். இவர்கள்
எப்போதும் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் பிறரைக் குறை கூறிக்கொண்டு பிரச்சனைகளை வளர்த்துக்
கொண்டிருப்பார்கள்.
சிலர் தீர்வு காண முடியாத பிரச்சனைகளை பற்றி சிந்திப்பார்கள்
.இவர்களை செயலற்ற வெட்டிப் பேச்சாளர்கள் (inactive) என்பர் .நாம் நம்முடைய வாழ்க்கையில்
தடையில்லாத முன்னேற்றத்தைக் காண விரும்பினால் நம்மால் நேரடியாக கட்டுப்படுத்த முடியக்
கூடிய நம்மோடு தொடர்புடைய பிரச்சனைகளில் மட்டுமே ஈடுபடவேண்டும்
No comments:
Post a Comment