வெற்றி
வெற்றியின் ரகசியம் நாம் நம்மை உண்மையிலேயே எவ்வளவு பாதுகாப்பாய் நேசிக்கின்றோம் என்பதைப் பொருத்தது.
வெற்றியால் ஆர்வமும் தோல்வியால் கவலையும் கூடாது.ஆர்வம் தலைக்கேறிவிட்டால் வெறியில் அறிவு மங்கிவிடும்.கவலை இதயத்தைத் தீண்டிவிட்டால் அறிவு முறிந்துவிடும்.
ஒவ்வொரு நிமிடமும் தனக்குத் தானே நேர்மையாக இருக்கும் எந்த அறிவாளி யும் தான் விரும்பும் எந்த உயரத்தையும் எட்ட முடியும் .
ஒருவருக்கு கல்வியும் அனுபவமும் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வதற்கு அவசியமாகும்.கல்வியில் பாடத்தை முதலில் படிக்கவேண்டும் தேர்வு இறுதியில் வரும்.ஆனால் அனுபவம் நேர்எதிரானது.தேர்வு முதலில் பாடம் பின்னர்தான்.கல்வியில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பார்.அனுபவத்தை அவரே கற்றுக்கொள்ள வேண்டும்.
பறவை தன்னிச்சையாகப் பறந்து செல்ல வேண்டுமானால் முதலில் தடையான சிறைக் கூண்டு திறக்கப்படவேண்டும்.அதுபோல நல்லெண்ணங்கள் மலர்ந்து எங்கும் மணம் பரப்ப வேண்டுமானால் தடுக்கும் தீய எண்ணங்கள் அகற்றப்படவேண்டும்.நல்லெண்ணங்களும் தீய எண்ணங்களும் ஒன்றுக்கொன்று எதிர்ப் பொருட்கள் போன்றவை.எப்போதும் ஒன்றையொன்று முழுமையாக அழித்துக் கொண்டுவிடும்.எஞ்சிய மீதமே இறுதியில் வெளிப்பாட்டுத் தோன்றுகின்றது .
வெற்றி பெற்றோரும்,தோல்வி கண்டோரும் அவர்களுடைய திறமைகளினால் அதிகம் வேறுபட்டவர்களில்லை.உண்மையில் அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது அவர்கள் தங்கள் உள்ளார்ந்த திறமையை மேம்படுத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் காட்டும் ஆர்வத்தின் அளவே.
No comments:
Post a Comment